எச்.ராஜா பாவம்.. அண்ணாமலை "வீடியோ" அஸ்திரம்! இது ப்ளூ பிலிம் கட்சியா? பற்ற வைக்கும் மாஜி "புள்ளி"

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ, ஆடியோ அரசியலை செய்கிறார், இதெல்லாம் தவறு,.. பாஜகவில் இருக்கும் சீனியர்கள் பாவம் என்று முன்னாள் பாஜக நிர்வாகியும், ஆர்எஸ்எஸ் வாதியுமான ராமசுப்ரமணியன் ஒன்இந்தியாவிற்கு பேட்டி அளித்துள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு பாஜகவில் இருந்து வெளியேறி இருக்கிறார் காயத்ரி ரகுராம். அண்ணாமலையின் ஒரே குறிக்கோள் உண்மையான தொண்டர்களை வெளியே அனுப்புவதுதான். பாஜகவிற்கு வாழ்த்துக்கள். நான் இந்த முடிவை அவசரமாக எடுக்க காரணம் அண்ணாமலைதான். அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை ஒரு மலிவான தந்திரமான பொய்யர் மற்றும் தர்மத்திற்கு எதிரான தலைவர்.

கடந்த 8 வருடங்களாக என்னுடன் வேலை பார்த்த கட்சி தொண்டர்களுக்கு நன்றி. அவர்கள் என்னுடன் அன்பாக இருந்தனர். எனக்கு மரியாதை கொடுத்தனர். அது ஒரு சிறந்த பயணம். மற்றவர்களை அவமானப்படுத்துவது இந்து தர்மம் கிடையாது. நான் அண்ணாமலை தலைமைக்கு கீழ் இயங்க முடியாது. இங்கே சமூக நீதி இல்லை. பெண்களே பாதுகாப்பாக இருங்கள். மற்றவர்கள் உங்களை காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். யாரும் உங்களுக்காக வர மாட்டார்கள். நீங்கள் தனித்து இருக்க வேண்டிய நிலைதான் உள்ளது, என்று கூறிவிட்டு காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.

பாஜகவில் உட்கட்சி மோதல் வெட்டவெளிச்சம் ஆகி உள்ள நிலையில், கட்சியில் நடக்கும் மோதல்கள் குறித்து முன்னாள் பாஜக நிர்வாகியும், ஆர்எஸ்எஸ் வாதியுமான ராமசுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார். ஒன்இந்தியா அரசியலுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு,

பாஜக

பாஜக

பாஜகவிற்குள் நிறைய மோதல் நிலவி வருகிறது. முன்னதாக மதன் ரவிசந்திரன் வீடியோ விவகாரம் காரணம் கேடி ராகவன் அரசியல் கேரியர் போய்விட்டது. அப்போதே மதன் ரவிசந்திரன் நிறைய வீடியோக்கள் இருப்பதாகவும், கேசவ விநாயகம் மீதும் புகார்கள் வைத்து இருந்தார். கேடி ராகவனை அண்ணாமலை அப்படி ஹேண்டில் செய்து இருக்க கூடாது. அண்ணாமலை பேசுவது எல்லாம் சரியாக இல்லை. திமுகவை விமர்சனம் செய்கிறேன் என்று ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். முதல்வர் துபாய் சென்ற போது 3000 கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார் என்று கூறினார். இதெல்லாம் முட்டாள்தனமாக இருக்கிறது. இப்படி எல்லாம் பணத்தை எடுத்து செல்ல முடியுமா? அமலாக்கத்துறை இருக்கிறது, கஸ்டம்ஸ் இருக்கிறது இவர்கள் எல்லாம் இருக்கும் போது இப்படி எல்லாம் பொய்யாக பேச கூடாது. லுலு மாலை எதிர்த்தார்.. அந்த மால் குஜராத், பெங்களூரில் கூட இருக்கிறதே.

ராமசுப்பிரமணியன்

ராமசுப்பிரமணியன்

பாஜகவிற்குள் தலைவர்களுக்குள் நிறைய மோதல் உள்ளது. அவர் திடீரென அரசியலுக்குள் வந்து இருக்கிறார். பாராசூட்டில் வந்து இறங்கியது போல அவர் வந்ததும் பதவி வாங்கிவிட்டார். அவர் வானதி சீனிவாசனை மதிப்பது இல்லை. எச். ராஜாவை கண்டுகொள்வது இல்லை. பாவம் அவர். அவரெல்லாம் சீனியர். பொன்னாரையும், சிபிஆரையும் கூட அண்ணாமலை கண்டுகொள்ளவில்லை. சீனியர்கள் எல்லாம் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

அலிஷா

அலிஷா

அலிஷா சில விஷயங்களை, புகார்களை சொல்கிறார். நான் பாஜகவில் பல காலமாக இருந்தேன். சூர்யா தன்னை மோசமாக வர்ணித்ததாக அலிஷா அப்துல்லா சொல்கிறார். கட்சி அலுவலகம் முன்பே பாரத் மாதா சிலைக்கு முன் பேசுகிறார். இதெல்லாம் என்ன? கட்சியில் என்ன நடக்கிறது? டெய்சி விவகாரத்தில் காயத்திரி நியாயமாக பேசினார். ஆனால் அவரின் கருத்தை கூட கேட்காமல் அவரை ஏன் நீக்கினார்கள்? அண்ணாமலை முன்னாள் போலீஸ். அதனால் இந்த வீடியோ, ஆடியோ கலாச்சாரம் வந்துவிட்டது போல. எல்லோரையும் வீடியோ, ஆடியோ எடுத்தால் கட்சியில் யார்தான் பேசுவார்கள்.

பெண்கள் இணைவார்களா?

பெண்கள் இணைவார்களா?

இப்படி இருந்தால் பாஜகவில் பெண்கள் இணைவார்களா? துபாயில் காயத்ரி என்ன செய்தார் தெரியுமா என்று பாஜக அலுவலகம் உள்ளே அண்ணாமலை பேசி இருக்கிறார். இதெல்லாம் சரியா? இதெல்லாம் கட்சிக்கு நெகட்டிவ் இல்லையா? விமானத்தில் அண்ணாமலை எமர்ஜென்சி கதவை திறப்பது எல்லாம் சரியா? அண்ணாமலையை சீனியர்கள் யாரும் தட்டிக்கேட்கவில்லை. அதற்கு பயம் காரணம் கிடையாது. சுயநலம். சீனியர்கள் லீடர் எல்லாம் தங்களுக்கு சீட் கிடைத்தால் போதும் என்று இருக்கிறார்கள்.

சீனியர்கள்

சீனியர்கள்

எச் ராஜா, வானதி, பொன்னார், சிபிஆர் எல்லாம் தங்களுக்கு சீட் கிடைத்தால் போதும் என்று இருக்கிறார்கள். தமிழிசை இருந்த போது இப்படி இல்லை. அவர் மீடியாவிடம் கூட நன்றாக பேசுவார். ஆனால் அண்ணாமலை மீடியாவிடம் மோசமாக நடந்து கொள்கிறார்கள். சீனியரக்ள் இப்படி அமைதியாக இருப்பது கட்சிக்கு நல்லது கிடையாது. கட்சிக்குத்தான் சிக்கலாக முடியும். இன்னொரு பக்கம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடி தனியாக நிற்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருக்கு ஓபிஎஸ், தினகரன், சசிகலா எல்லாம் வேண்டாம் என்று நினைக்கிறார். பாஜகவிற்கு எடப்பாடி பெரிதாக இடம் கொடுக்க மாட்டார்.

எடப்பாடி

எடப்பாடி

ஆனால் பாஜகவை மொத்தமாக துரத்திவிட எடப்பாடி நினைக்கவில்லை. தேர்தல் நேரத்தில் எடப்பாடி பாஜகவிற்கு எதிராக வேலை பார்க்க வாய்ப்பு உள்ளது. பாஜக நிற்கும் இடங்களில் அதிமுக தொண்டர்களே எதிராக வேலை பார்க்க வாய்ப்பு உள்ளது. பாஜக தன்னை பெரிய கட்சியாக நினைத்துக்கொள்ளலாம். ஆனால் எடப்பாடி அவர்களை அவர்களின் இடத்தில் உட்கார வைப்பார் என்று நம்புகிறான். அண்ணாமலை 25 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று சொல்வதை எல்லாம் பெரிதாக நினைக்க கூடாது. இதற்கு முன் சட்டசபை தேர்தலில் 90 இடங்களில் போட்டியிடுவோம் என்று கூறினார்களே? பாஜக போட்டியிட்டதா? அண்ணாமலை பேசலாம்.. ஆனால் எடப்பாடி கொடுக்கணுமோ.. எடப்பாடி கடுமையானவர்.. அவ்வளவு எளிதாக இடங்களை பெற முடியாது. அண்ணாமலை பேசுவதை எல்லாம் பெரிதாக பார்க்க கூடாது. அதிமுக இடத்தை எல்லாம் பாஜகவால் பிடிக்க முடியாது.

 அண்ணாமலை பயம்

அண்ணாமலை பயம்

அண்ணாமலை நெகட்டிவ் அரசியல் செய்கிறார். அவரால் பாஜகவை வளர்க்க முடியாது. அண்ணாமலை செய்வதில் பயம் என்னவென்றால்... வீடியோ விவகாரம். என் வயசுக்கு பேச கூடாது. ப்ளூ பிலிம் எடுக்கும் கட்சியாக பாஜக மாறிவிட்டது. இதெல்லாம் தவறு. அவர் தன்னுடைய வாட்ச் பற்றி பேசியது எல்லாம் தேவை இல்லாத விஷயம். ஏப்ரல் மாதம் தன்னுடைய வாட்ச் பில்லை கொடுக்கிறேன் என்று கூறியது எல்லாம் தேவையில்லாத விஷயம். அவரிடம் பில் இல்லை. அவருக்கு பிஎல் சந்தோஷ் ஆதரவு இருக்கிறது. அந்த சப்போர்ட் காரணமாக இப்படி அண்ணாமலை செய்து கொண்டு இருக்கிறார்.

வாட்ச்

வாட்ச்

அதனால் தன் நிலைமை தெரியாமல் துள்ளிக்கொண்டு இருக்கிறார். அண்ணாமலை தரையில் இருக்கணும். யதார்த்தமாக இருக்க வேண்டும். தடாலடி அரசியல் செய்தால் கட்சிக்காரர்கள் அவருக்கு எதிராக திரும்புவார்கள். இரண்டாம் கட்ட தலைவர்கள் அவருக்கு எதிராக புகார் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். எல் முருகனுக்கு எல்லாம் இந்த விவகாரம் தெரியும். அவருக்கு ஆர்எஸ்எஸ் பின்னணி உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம். எல் முருகனும் சந்தோசமாக இல்லை. பார்க்க வேண்டும் என்ன நடக்கிறது என்று, பாஜக நிர்வாகியும், ஆர்எஸ்எஸ் வாதியுமான ராமசுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+