கொங்கு பகுதிக்கு திமுக செய்தது இதான்.. இதுல ஸ்டிக்கர் ஒட்டுங்க.. ஆ.ராசா பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி!
சென்னை: கருணாநிதி பேனா இல்லை என்றால் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அண்ணாமலை ஆடு மேய்த்துக் கொண்டிருப்பார், எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார் என திமுக எம்.பி ஆ.ராசா பேசிய நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அண்ணாமலை.
நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, "கருணாநிதி ஒழிக என்று கூட அண்ணாமலை திட்டிக் கொள்ளட்டும். ஆனால் கருணாநிதி போட்ட கையெழுத்துகளால் தாமோ தனது தந்தையோ எந்த பயனும் அடையவில்லை என்று மட்டும் அவர் சொல்ல வேண்டாம். கொங்கு வேளாளர் மற்றும் கவுண்டர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கையெழுத்து போட்டது கருணாநிதியின் பேனா.

அன்று கருணாநிதி அந்த கையெழுத்தை போடக் காரணமான பேனா இல்லை என்றால் அண்ணாமலை ஆடு மேய்த்துக்கொண்டிருப்பார். எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். சகோதரி வானதி சீனிவாசன் தென்னந்தோப்பில் கூடை முடைந்து கொண்டிருப்பார்" எனப் பேசிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, "ஊழல் செய்து மக்கள் பணத்தைத் திருடியவர்கள் ஜம்பமாக வலம் வரும்போது, ஆடு மேய்ப்பது, வெல்லமண்டி வைத்திருப்பது, கூடை பின்னுவது போன்ற விவசாயம் சார்ந்த தொழில்கள், ஆ.ராசாவுக்குக் கேவலமான தொழில்களாகத்தான் தெரியும்.
ஊழல் செய்து மக்கள் பணத்தைத் திருடியவர்கள் ஜம்பமாக வலம் வரும்போது, ஆடு மேய்ப்பது, வெல்லமண்டி வைத்திருப்பது, கூடை பின்னுவது போன்ற விவசாயம் சார்ந்த தொழில்கள், திரு ஆ.ராஜாவுக்குக் கேவலமான தொழில்களாகத்தான் தெரியும்.
— K.Annamalai (@annamalai_k) July 16, 2023
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற சொல்லாடல், கலைஞர்… pic.twitter.com/w6v5QGW8Q0
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற சொல்லாடல், கலைஞர் கருணாநிதி பிறக்கும் முன்னரே வழக்கத்தில் உள்ளது என்பதை 2ஜி ராஜாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கொங்கு பகுதிக்கு திமுக செய்தது என்னவென்றால், 1970ஆம் ஆண்டு கொங்கு பகுதியில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி போராடிய மூன்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றதுதான்.
கடும் உழைப்புக்குப் பெயர் போன கொங்கு மக்களை அசிங்கப்படுத்துவதை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும். யார் முன்னேற்றத்துக்காவது தனது கட்சித் தலைவர் பெயரில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என ஆ.ராசா விரும்பினால், சைக்கிளில் நீதிமன்றம் சென்ற அவர் உள்ளிட்ட திமுகவினர், இன்று பல ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருப்பதற்கு வேண்டுமானால் கருணாநிதி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications