'கூவல்' தான் முக்கியம்.. கமல்ஹாசனை பங்கம் செய்த அண்ணாமலை.. நீங்களே பாருங்க
சென்னை : "ராஜராஜ சோழனையும் தாண்டி கோவில்களுக்கு குடமுழுக்கு செய்தவர் சேகர் பாபு" என்று சென்னை துறைமுகம் தொகுதியில் சேகர் பாபுவை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். இது ஒரு தொலைக்காட்சியின் எக்ஸ் தளபக்கத்தில் வீடியோவாக பதிவிடப்பட்டிருந்தது. இதனை டேக் செய்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கமல்ஹாசனை கிண்டல் செய்யும் தொணியில் மீம்ஸ் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்ட அந்த மீம்ஸ் புகைப்படம் எதை பற்றியது என்றால், லிவிங்ஸ்டன், வடிவேலு நடித்த ஒரு படத்தில் வருங்கால ஜனாதிபதி முருகேசன் வாழ்க என்று ஒருவர் லிவிங்ஸ்டனை பார்த்து கூறுவார்.. உடனே என்னம்மா கூவுகிறான் பாரு என்று லிவிங்ஸ்டன் வடிவேலுவிடம் கூறி புலகாங்கிதம் அடைவார்..

கூவல் தான் முக்கியம்
அப்போது வடிவேலு ஒரு நிமிடம் அவரை ஏக்கத்துடன் பார்த்து, கொய்யால கொடுத்த காசுக்கு மேலே கூவுகிறான் என்று அந்த நபரை பார்த்து கூறுவார்.. அப்படியான மீம்ஸ் புகைப்படத்தில் ஒன்றைத்தான் அண்ணாமலை பதிவிட்டிருந்தார். அதாவது லிவிங்ஸ்டன் கூறுவது போல்.. கூவல் தான் முக்கியம் என்பதை குறிப்பால் உணர்த்தும் படத்தை பதிவிட்டிருந்தார். அதில் இந்த கூவலுக்காகவே கமல்ஹாசன் நினைவு கூறப்படுவார் என்பதாக அந்த மீம்ஸ் புகைப்படம் இருந்தது.

கமல்ஹாசன் பேசியது என்ன
கமல்ஹாசன் நேற்று துறைமுகம் தொகுதியில் சேகர்பாபுவை ஆதரித்து என்ன தான் பேசினார்.. அதனை அப்படியே பார்ப்போம். " நண்பர் சேகர்பாபுவை அறிமுகம் செய்ய தேவையே இல்லை என்கிற அளவிற்கு அவரது சேவை அவருக்கு முன்னால் நிற்கிறது.. அவரு சொல்லிக்க மாட்டாரு.. ஆனால் நான் சொல்லாம்.. ராஜராஜ சோழனையும் தாண்டி குடமுழுக்கு செய்தவர் சேகர்பாபு.. அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்பார் சேகர்பாபு.. ஆனால் நடந்த உண்மையை சொல்கிறேன்..
கருணாநிதி அருங்களம்
துறைமுகம் தொகுதியை பற்றி சொல்லும் போது, கலைஞர் தான் நியாபகத்திற்கு வருகிறார்... அந்த அருங்களம் பல முறை தொட்டுச்சென்ற தொகுதி தான் துறைமுகம்... அருங்களம் என்றால் என்னவென்று கேட்டுவிடாதீர்கள்.. இப்போதே ஹிந்தி கற்குமாறு கூறுகிறார்கள்.. அப்புறம் தமிழை கற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்... அருங்களம் என்றால் யாரும் அழகான கப்பல்... யாரும் பார்க்காத கப்பல்.. என்பது தான் அதன் பொருள்.
ஸ்டாலின் செய்த சாதனைகள்
அப்படி கப்பலில் ஏறி வந்தவர்கள் பலர்.. அதில் நானும் ஒருவன்.. நீங்களும் தான்... இந்த துறைமுகம் தொகுதி பெற்றிருக்கும் முன்னேற்றங்களுக்கு எல்லாம் அவரும் (கலைஞரும்) காரணம்.. எனவே அவரது மகன் முக ஸ்டாலின் இங்கே மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் ஏற்கனவே எங்கள் கட்சிக்காக வந்த அந்த தொகுதிக்கு மீண்டும் வந்திருக்கிறேன். இப்போது எங்கள் தொண்டர் இங்கே வந்திருப்பது, மீண்டும் திமுக ஆட்சி வரவேண்டும் என்பதற்கு தான். இது நியாயமான ஆசை.. பேராசை இல்லை.. நாட்டிற்கு தேவையான ஆசை.. எனது நண்பர் ஸ்டாலின் செய்த சாதனைகளை பல இடங்களில் பட்டியலிட்டு காட்ட வேண்டிய தேவையே இல்லை.. நடந்து போனாலே தொகுதிகளில் தெரியும்.." இவ்வாறு கமல்ஹாசன் கூறியிருந்தார்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
அரசு பள்ளி முட்டை.. ₹3.70க்கு வாங்கி ₹5.63 விற்பனை. விஜய்க்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications