Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதாளம் வரை பாய்ந்துவிட்டது.. ஆருத்ரா மோசடி.. அண்ணாமலை பெயர் சிக்கியது ஏன்? இதுதான் பின்னணியா?

ஆருத்ரா நிறுவன மோசடி தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆருத்ரா நிறுவனத்தின் ஹாரிஸுக்கு இப்படி அண்ணாமலை சப்போர்ட் செய்தது ஏன்? அவர் தேடப்படும் குற்றவாளி என்ற போதிலும் சப்போர்ட் செய்தது ஏன்? என்று மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆருத்ரா நிறுவன மோசடி தேசிய அளவில் கவனம் பெற தொடங்கி உள்ளது. வேலூரை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் செயல்பட்டு வந்தது. சென்னை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்களுக்கு கிளை இருந்தது.

ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் தருவோம். 10 மாதம் இந்த பணத்தை தருவோம். உங்களுக்கு 3.6 லட்சம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்துள்ளனர். இதை நம்பி முதலீடு செய்த மக்களை அந்த நிறுவனம் கடைசியில் ஏமாற்றி உள்ளது. இந்த நிலையில்தான் ஆருத்ரா நிறுவன இயக்குனர் ஹாரிஸுக்கு கட்சியில் பதவி கொடுத்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த புகார்கள் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் பாண்டியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஆருத்ரா

ஆருத்ரா

அவர் தனது பேட்டியில், ஆருத்ரா என்பது ஒரு கோல்டு பைனான்ஸ். அவர்கள் 1 லட்சம் ரூபாய்க்கு 10 ஆயிரம் ரூபாய் வட்டி கொடுப்பதாக கூறுகிறார்கள். வேலூரில் இவர்கள் இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதையடுத்து அப்பகுதி விவசாயிகள், மக்கள் பலர் தங்களிடம் இருக்கும் சேமிப்புகளை 1 லட்சம், 2 லட்சம் என்று போடுகிறார்கள். இவர்கள் 3000 - 4000 கோடி ரூபாய் வசூல் செய்கிறார்கள். இதை நிதித்துறை அமைச்சகம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பொருளாதார பிரிவு பார்த்துக்கொண்டு இருக்கிறது. வேலூர் ஆட்சியர், வேலூர் எஸ்பி பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆருத்ரா கோல்டு

ஆருத்ரா கோல்டு

அவர்கள் இதை பார்த்துக்கொண்டே இருந்தும் கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதற்கு வெளிப்படையாக விளம்பரம் கொடுக்கிறார்கள். பரபரப்பாக வெளிப்படையாக பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் அதை தடுக்கவில்லை. இதை எல்லாம் கண்காணிக்கவே மத்திய போலீஸ் பிரிவு இருக்கிறது. அதற்கான விங் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்துள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இதில் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எடுக்காமல் அமைதி காத்து வந்து உள்ளனர். குதிரை வெளியே சென்ற பின் இப்போது குதிரை செட்டை பூட்டி உள்ளனர்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

அதிகாரிகள் பணம் வாங்காமல் இப்படி எல்லாம் மோசடி நடக்க விட மாட்டார்கள். எல்லோரும் தப்பித்து ஓடிய பின்புதான் இதில் நடவடிக்கை எடுத்தனர். இன்றுவரை ராஜேஷ், ஹாரிஸை கைது செய்யவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியாதா? அவரை ஏன் கைது செய்யவில்லை. 1000 கணக்கான கோடி.. ஒரு கோடி.. ரெண்டு கோடி இல்லை. இதில் தற்போது அண்ணாமலை பெயர் அடிபடுகிறது. பாஜகவின் விளையாட்டு பிரிவு மாநில தலைவராக ஹாரிஸை போடுகிறார். அவர் தேடப்படும் குற்றவாளி. அவரை அந்த பிரிவின் தலைவராக போடுகிறார். அதோடு பிரதமரை அழைப்பதற்கு விமான நிலையத்திற்கு இவரை கூட்டி செல்கிறார்கள்.

ஹாரிஸ்

ஹாரிஸ்

ஹாரிஸுக்கு இப்படி அண்ணாமலை சப்போர்ட் செய்தது ஏன்? அவர் தேடப்படும் குற்றவாளி. பல ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளார். இந்தியாவின் பெரிய குற்றவாளியாக அவர் மாற வாய்ப்பு உள்ளது. ஆனால் அவரை பாஜகவில் சேர்த்து உள்ளனர். அவருக்கு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளனர். அதோடு அவரை பிரதமரை வரவேற்கவும் கூறி உள்ளனர். இப்படி இருக்கும் போது போலீஸ் எப்படி நடவடிக்கை எடுக்கும். இப்போது வரை இவரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? பல ஆயிரம் கோடி மோசடி செய்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை.

பணம் பாதாளம்

பணம் பாதாளம்

அவரை தேடுவது இருக்கட்டும். ஆனால் இன்னும் வழக்கு பதிவு செய்யவில்லை. அப்படி என்றால் போலீசார் கையை யார் கட்டி போட்டி இருக்கிறார்கள். அவரின் செல்போன் டவரை டிராக் செய்து ஏன் இவர்கள் தேடுவது இல்லை. இந்தியாவில் இருக்கும் பினாமிகளிடம்தான் அவரின் பணம் உள்ளது. அதனால் ஹாரிஸ் வெளிநாட்டிற்கு செல்ல மாட்டார். பினாமிகளிடம்தான் அந்த பணம் உள்ளது என்பதால் ஹாரிஸ் அதை விட்டுவிட்டு வெளிநாடு செல்ல மாட்டார். இந்த விவகாரத்தில் பணம் பாதாளம் வரை பாய்ந்து உள்ளது. அதனால்தான் இதில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர், என்று மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+