அண்ணாமலை சொல்லும் ‘வீடியோ’.. “ஹனி ட்ராப்” டேப்.. அருவருப்பு.. இவரெல்லாம் தலைவரா? - காயத்ரி காட்டம்!
சென்னை : "பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை திமுகவின் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செக்ஸ் வீடியோவை மீண்டும் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். எந்த தலைவர் இப்படி சொல்வார். அது மிகவும் அருவருப்பானது. கட்சியில் இப்படித்தான் அச்சுறுத்தப்படுகிறார்கள். இன்னும் பல டேப்கள் இருப்பது போல் தெரிகிறது" என விளாசியுள்ளார் அண்மையில் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த காயத்ரி ரகுராம்.
மேலும், "தற்போது அண்ணாமலை வாயிலிருந்தே வார்த்தைகள் வந்துள்ளன, இது சரியான ஆதாரம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.
இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது பற்றி தொடர்ச்சியாக ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார் காயத்ரி ரகுராம்.
அந்தவகையில், அண்ணாமலை, வீடியோ பற்றி பேசியது குறித்து காட்டமாக விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம். காயத்ரி ரகுராம் தொடர்ச்சியாக அண்ணாமலையை தாக்கி கருத்துகளைக் கூறி வருகிறார்.

அண்ணாமலை பிரஸ் மீட் பரபரப்பு
சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதில் கூறாமல், கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களின் பெயரையும், அவர்கள் அங்கம் வகிக்கும் செய்தி நிறுவனத்தின் பெயரையும் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அண்ணாமலை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அண்ணாமலை குறித்து கட்சியை விட்டு விலகிய காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ள ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செக்ஸ் வீடியோ
காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், "பத்திரிகையாளர் சந்திப்பில் அண்ணாமலை திமுகவின் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய செக்ஸ் வீடியோவை மீண்டும் வெளியிடப்போவதாக கூறியுள்ளார். எந்த தலைவர் அப்படி சொல்வார்? அது மிகவும் அருவருப்பானது. கட்சியில் இப்படித்தான் அச்சுறுத்தப்படுகிறார்கள். இன்னும் பல டேப்கள் இருப்பது போல் தெரிகிறது. அண்ணாமலை நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது செய்யவில்லை. டேப்களை மட்டும் சேகரிக்கிறீர்களா?

அண்ணாமலை வாயிலிருந்தே ஆதாரம்
கட்சியில் இருப்பவர்களுக்கு ஒருவரின் நலமும் பாதுகாப்பும் அமைய வேண்டும் என்று அண்ணாமலை வாழ்த்த வேண்டும். ஒருவரை கட்சியை விட்டு வெளியே செல்லும் போது மற்ற இடங்களில் அவர்கள் நலமும் பாதுகாப்புடன் இருந்தால் அண்ணாமலை அதை கொடுக்கத் தவறிவிட்டார் அல்லது தோல்வியடைந்து விட்டார் என்று அர்த்தம். தற்போது இது சரியான ஆதாரம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை வாயிலிருந்தே வார்த்தைகள் வந்துள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹனி ட்ராப்
மேலும் மற்றொரு பதிவில், "கேள்வி கேட்டதற்காக பத்திரிகையாளர்களை திட்டுவதும், மிரட்டுவதும் உங்கள் விரக்தியை காட்டுகிறது, அண்ணாமலை. பத்திரிகைகளை அவமதித்ததற்காக கண்டிக்கிறேன். ஹனி ட்ராப் பிரச்சினை வந்தபோது ரஃபேல் வாட்ச் வைத்து திசை திருப்பிவிட்டீர்கள். இப்போது பிஜிஆர் வைத்து திசை திருப்பிவிட்டீர்கள்." என அண்ணாமலையைச் சாடியுள்ளார் காயத்ரி ரகுராம்.

திமுகவுடன் தொடர்பு
முன்னதாக காயத்ரி ரகுராம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "கட்சியை விட்டு வெளியில் செல்வோரை வாழ்த்தி வழி அனுப்புவதே எனது வழக்கம், வெளியேறுவோர் என்னை புகழ வேண்டிய அவசியமில்லை. பெண்கள் நிறைய பேர் பாஜகவில் இன்று இணைகின்றனர். காயத்ரி ரகுராம் எங்கு சென்றாலும் நன்றாக இருக்கட்டும். திமுகவை நான் ஆக்ரோஷமாக எதிர்த்து வருகிறேன். பாஜகவில் சிலர் தவறாக திமுகவுடன் தொடர்பில் இருந்திருக்கலாம். அதனால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும்" எனத் தெரிவித்தார்.

வீடியோ உள்ளது
மேலும், திமுக அமைச்சர் மீது மிக முக்கியமான குற்றச்சாட்டு உள்ளது. வீடியோ ஆதாரத்துடன் உள்ளது. நாள் தருகிறேன் அதை நீங்கள் ஒளிபரப்புவீர்களா என்று கேட்டார் அண்ணாமலை. "ஒவ்வொரு முறையும் நீங்கள் குற்றச்சாட்டு வைக்கிறீர்கள் ஆனால் ஆதாரத்தைத் தர மறுப்பது ஏன்?" என்று பதிலுக்கு செய்தியாளர் கேள்வி எழுப்பியதும் டென்ஷன் ஆன அண்ணாமலை, கேள்வி கேட்ட செய்தியாளரை குறிவைத்து கோபமாகப் பேசினார்.












Click it and Unblock the Notifications