கருணாநிதியையும் விடாத அண்ணாமலை.. காவிரி நீர் கிடைக்காததற்கு காரணமே அவர்தானாம் - பரபர குற்றச்சாட்டு
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால்தான் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் வரவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் யாத்திரை சென்ற அண்ணாமலை பேசுகையில், "1974 ஆம் ஆண்டு, காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை, அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி புதுப்பிக்கத் தவறியதன் விளைவு, தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் கிடைக்காமல் போனது. தமிழகத்தைச் சேர்ந்த 12 திமுக கூட்டணி அமைச்சர்கள் இருந்தும், மத்திய அரசிதழில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வெளியிடத் தவறியவர் கருணாநிதி. பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து கர்நாடக மற்றும் தமிழகத்திற்கு இடையே இருந்த காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டார்.

எப்போதெல்லாம் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கிறதோ, அப்போதெல்லாம் காவிரிக்கு பிரச்சினை ஏற்படுகிறது. மேகதாதுவில் நாங்கள் அணை கட்டுவோம் என காங்கிரஸ் அரசு பிடிவாதம் பிடிக்கிறது. மயிலாடுதுறை திமுக நிர்வாகிகள், "காங்கிரஸை எதிர்ப்பது போல நாம் நடிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்கின்றனர். தமிழக விவசாயிகளை ஏமாற்றி வாக்கு வாங்க மட்டுமே இவர்கள் காங்கிரஸை எதிர்ப்பது போல நடிக்கப் போகிறார்கள். இது தான் இவர்களுக்கு காவிரியின் மேல் உள்ள கரிசனம்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒரத்தநாடு அருகே வாய்க்காலில் தண்ணீர் வராததால் வயல்களில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் நடவு செய்த குறுவை நெற் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்து வயல்களில் ஊற்றினர். இதற்கு காரணம் யார்? இன்று மட்டும் அல்ல, என்றுமே, திமுக மற்றும் காங்கிரஸ் விவசாயிகளின் துரோகிகள். ஒரு ஏக்கர் நிலத்தில் 4.2 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் விளையும் காவேரி என்று பொருநராற்றுப்படை பாடல் கூறுகிறது.
இன்று ஒரு ஏக்கர் நிலத்தில் 1.5 முதல் 2 மெட்ரிக் டன் நெல் கிடைத்தால் பெரிதாக உள்ளது. காவிரி நீரை குறித்த நேரத்தில் குறித்த அளவில் பெற்றுத் தராமல் திமுக வஞ்சித்ததன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில், பல லட்சம் ஏக்கருக்கு, நெல் சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளது. சுமார் 3.3 லட்சம் டன் நெல் கொள்முதல் இந்த ஆண்டு குறைந்துள்ளது. இதனால் ரேஷன் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
பிரதமர் மோடி ஆட்சியில், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கடந்த 9 ஆண்டுகளில் 67 சதவீதம் உயர்ந்துள்ளது. வருடம் 6000 ரூபாய் தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 18.8 லட்ச கிசான் கடன் அட்டை தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசன மேம்பாட்டிற்கு மத்திய அரசு வழங்கிய நிதி 2961 கோடி ரூபாய். காவிரி நதியின் மேம்பாட்டிற்கு வழங்கிய நிதி 264 கோடி ரூபாய்.
சந்தை விலை 3000 ரூபாய் மதிப்புள்ள 45 கிலோ மூட்டை யூரியாவை விவசாயிகளுக்கு 242 ரூபாய் மானிய விலைக்கு மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தில் மானிய விலையில் உரம் வாங்கி பயன்பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 27,35,187. தஞ்சாவூர் மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு, உதான் திட்டத்தின் கீழ் தஞ்சையில் இருந்து சென்னைக்கு சிறு ரக விமான சேவை, பிரதமரின் வீடு திட்டம், குழாய் குடிநீர், இலவச கழிப்பறைகள், இலவச சமையல் எரிவாயு இணைப்பு, பிரதமரின் மருத்துவ காப்பீடு, முத்ரா கடன் உதவி என லட்சக்கணக்கான தஞ்சாவூர் மக்கள் பலனடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நாடாளுமன்றமே செல்வதில்லை. இவரின் நாடாளுமன்ற வருகை வெறும் 48%. ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை சராசரி 79%. இதுவரை இவர் பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விகளின் மொத்த எண்ணிக்கை பூஜ்ஜியம். இவர் நிதித்துறையின் மத்திய இணைஅமைச்சராக இருந்தபோது செய்த சாதனை 2G வழக்கில் இருந்த சாட்சிகளை கலைக்க முயற்சித்தது மட்டும்தான்." என்றார்.
-
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications