சேலத்தில் அரசு நர்ஸ் இடுப்பை கிள்ளிய பிடிஓ.. பிபி பார்க்க வந்தபோது அநாகரீகம்.. ஆத்தூரில் என்னாச்சு?
சேலம்: சேலம் ஆத்தூர் நர்ஸ் ஒருவருக்கு, ரத்த அழுத்தப் பரிசோதனை செய்ய வந்த இடத்தில் அரசு உயர் அதிகாரியே செய்த பாலியல் அராஜகம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே மாநிலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று ஆளும் தவெக அரசை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டுத் துளைத்தெடுத்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியுள்ளது. ஆத்தூரில் அரங்கேறிய அந்த பதறவைக்கும் சம்பவம் என்ன தெரியுமா?
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்ற விவாதத்தை மீண்டும் கிளப்பியிருக்கிறது.

சேலம் ஆத்தூர் அரசு நர்ஸ்
"பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை" என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆளும் தவெக அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கடுமையாக விமர்சித்து கொண்டிருக்கும் நேரத்தில், சேலம் மாவட்டத்தில் அரசு பெண் அதிகாரிக்கு நடந்த இந்த பாலியல் அராஜகம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி ஒன்றியம், தகரப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட மூலப்புதூர் பகுதியில் 46 வயதான ஒரு பெண்மணி, கிராம சுகாதார செவிலியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 4ம் தேதி, கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி அதாவது பிடிஓ பணிபுரியும் 59 வயதான இளங்கோ என்பவர், தகரப்புதூர் ஊராட்சி அலுவலகத்திற்குத் திடீர் ஆய்வுக்கு வந்துள்ளார்.
பிபி பார்க்க வந்த பிடிஓ
அப்போது அங்கிருந்த ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குள் நுழைந்த பிடிஓ இளங்கோ, தனக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதாகக் கூறி, BP டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அங்கிருந்த நர்ஸிடம் கேட்டுள்ளார்.
அரசு அதிகாரி ஆயிற்றே என்று அந்தப் பெண் செவிலியரும், பிடிஓ இளங்கோவுக்கு ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்துள்ளார். ரத்த அழுத்தத்தை சோதித்துக் கொண்டிருந்த நர்ஸின் இடுப்பை, பிடிஓ இளங்கோ திடீரென கிள்ளியுள்ளார். உயர் அதிகாரி என்றும் பாராமல், பொது இடத்தில் தன் மீது கைவைத்த பிடிஓவின் இந்த அநாகரிகச் செயலால், சம்பந்தப்பட்ட நர்ஸ் அதிர்ச்சி அடைந்தார்.. ஒரு அதிகாரி என்றும் பாராமல், பிடிஓ இளங்கோவை அந்த ஸ்பாட்டிலேயே சத்தம் போட்டு, வறுத்தெடுத்துள்ளார்.
நர்ஸ் இடுப்பை கிள்ளி அநாகரீகம்
அதற்குள் இந்த விஷயம் நர்ஸின் தம்பியான 42 வயது மணிகண்டனுக்கு தெரியவந்தது.,. இதைக்கேட்டு அதிர்ந்த மணிகண்டன், நேராக கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் ஆத்திரத்துடன் புகுந்துள்ளார். அங்கே சேரில் உட்கார்ந்திருந்த பிடிஓ இளங்கோவிடம், ஏன் இப்படிச் செய்தாய்? என்று கேட்டு சரமாரியாக தாக்கி உள்ளார்.. இதில் பிடிஓ இளங்கோவின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து, காயமடைந்த பிடிஓவை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து பிடிஓ கொடுத்த புகாரின் பேரில், கெங்கவல்லி போலீசார் தம்பி மணிகண்டன் மீது கொலை மிரட்டல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
ஆனால், இந்த தகவலறிந்து கொதித்துப்போன மணிகண்டனின் மனைவி கௌசல்யா மற்றும் உறவினர்கள், கெங்கவல்லி காவல் நிலையத்தை ஒட்டுமொத்தமாக முற்றுகையிட்டனர். "அக்காவிடம் தப்பாக நடந்துகொண்ட பிடிஓவை விட்டுவிட்டு, தட்டிக் கேட்ட தம்பியைக் கைது செய்வதா?" என்று போலீசாரை நோக்கிக் கோஷமிட்டு வாதிடவும் விஷயம் விஸ்வரூபமெடுத்தது
தவெக அரசு மீது விமர்சனம்
பிறகு பாதிக்கப்பட்ட நர்ஸ், தன் மீது நடந்த பாலியல் சீண்டல் குறித்து அதிகாரப்பூர்வமாக போலீசில் புகார் அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி, இறுதியில் பிடிஓ இளங்கோ மீதும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் (வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வரும் வேளையில், அரசு நர்சுக்கு நடந்த இந்தச் சீண்டல் சம்பவம், தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லையா என்ற விவாதத்தை மீண்டும் கிளப்பி விட்டுள்ளது..!!!












Click it and Unblock the Notifications