அண்ணாமலை நடக்காத விஷயத்தை பேசவில்லை.. பாஜக வளர்வது அதிமுகவிற்கு பிடிக்கவில்லை.. நாராயணன் திருப்பதி
சென்னை: அண்ணாமலை நடக்காத ஒன்றை சொல்லவில்லை என்றும், எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அண்ணமாலை மீது இவர்கள் காட்டமாக விமர்சனம் செய்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
அண்ணாதுரை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் தற்போதைக்கு கூட்டணி இல்லை என்றும் தேர்தல் காலத்தில் தான் முடிவு செய்யப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக கூறியிருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த நிலையில், அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்தது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது:-

கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் முடிவு செய்வதுதான். அண்ணாமலை தமிழ்நாடு முழுவதும் பாத யாத்திரை சென்று கொண்டு இருக்கிறார். 234 தொகுதிகளுக்கும், 39 மக்களவை தொகுதிகளுக்கும் அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். மக்கள் வெள்ளம் அலைமோதுகிறது. அந்த அளவுக்கட்சு கட்சியை வளர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால், ஒரு வித பதட்டம் வந்து கொண்டு இருக்கிறது.
ஆனால், அதையெல்லாம் தாண்டி தனிப்பட்ட முறையில் அநாகரீகமாக அதிமுகவின் ஒரு சில தலைவர்கள் எங்களுடைய தலைவரை விமர்சிப்பதை நாம் கண்டிப்பாக ஏற்க முடியாது. அண்ணாமலை அவர்கள், இன்றைய ட்விட்டை கூட பார்த்து இருப்பீர்கள் நான் இன்று பதிவிட்டேன். அண்ணாமலை வரலாற்றில் பதிவு செய்த ஒரு விஷயத்தை தான் பதிவு செய்த விஷயத்தை தான் கூறியிருந்தாரே தவிர, அண்ணா குறித்து எந்த வித தவறான விஷயத்தையும் சொல்லவில்லை.
ஆனால் வேண்டும் என்றே அதை பிடித்துக் கொண்டு , எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காக அண்ணமாலை மீது இவர்கள் காட்டமாக விமர்சனம் செய்வதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தவறானது. தனிமனித தாக்குதல் தவிர்க்கபப்ட வேண்டும். கூட்டணி இப்போது இல்லை தேர்தலின் போதுதான் என்று அவர்கள் சொன்னார்கள் என்றால் அது ஒரு வகையில் சரிதான்... கூட்ட்ணி என்பது தேர்தல் காலத்தில் தானே...
அண்ணாமலை நடக்காத ஒன்றை பேசாத ஒன்றை சொல்லவில்லை. ஈவேரா அவர்கள், அண்ணாதுரை குறித்து விமர்ச்னம் செய்யாததா.. விமர்சனம் செய்து இருக்கிறார்கள். ஆனால், இன்றும் அண்ணாதுரை அவர்களையும் ஈவேரா அவர்களையும் தலைவர்களாக ஏறுக்கொண்டு இருக்கிறார்கள். அதை நம்மால் மறுக்க முடியாது. அதே சமயம் எம்.ஜி.ஆர் மிகப்பெரும் கடவுள் பக்தர்.
அதேநேரத்தில் ஜெயலலிதா இறைவழிபாட்டில் மிகப்பெரும் நம்பிக்கை கொண்டவர். இதையெல்லாம் மறுக்க முடியுமா. அதனால் வரலாற்று பதிவுகளை சொல்வதில் என்ன தவறு.. அதனால், இவர்கள் வேண்டும் என்றே எதற்காகவோ ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு பேசுவது என்பது தவறு ஒருமையில் பேசுவது எல்லாம் தவறுதான். அதனால், அண்ணாமலை சொல்வது போல அவருக்கு தன்மானம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.. இவ்வாறு அவர் கூறினார்.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்!












Click it and Unblock the Notifications