இந்த 6 அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தமிழகத்தில் ஊழல் ஒழியும்.. மதுரையில் கொந்தளித்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்த பெட்டியில் 6 அமைச்சர்களின் சொத்து விவரங்கள் இருக்கின்றன என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியிருந்த வாட்ச் வெளிநாட்டு கடிகாரம் என்றும் அது கிட்டதட்ட 3 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் அதை வாங்க அவருக்கு ஏது அவ்வளவு பணம் என்றும் திமுக குற்றம்சாட்டியது.

Annamalai says that if action taken against 6 ministers then there will be no corruption in TN

இந்த நிலையில் அது ரபேல் வாட்ச் என்றும் ரபேல் விமான உதிரி பாகங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட அந்த வாட்ச் உலகில் அது போல் 150 முதல் 200 பேரிடம் வரை மட்டுமே இருக்கும் என்றும் ஒவ்வொரு வாட்சிலும் சீரியல் நம்பர் போடப்பட்டிருக்கும் என்றும் அந்த அண்ணாமலை ஒரு பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

அதற்கான ரசீதை தருமாறு திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு அண்ணாமலையோ வாட்ச் வாங்கியதற்கான ரசீது தன்னிடம் இருப்பதாகவும் அதை விரைவில் வெளியிடுவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியலையும் என்னுடைய சொத்து பட்டியலையும் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை வருட பிறப்பின் போது DMK Files முதல் பாகத்தை வெளியிட்டிருந்தார். அதில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், செந்தாமரை, சபரீசன், செல்வி, மு.க.முத்து, மு.க.அழகிரி, துரை அழகிரி, கலாநிதி மாறன், தயாநிதிமாறன் ஆகியோரின் படங்களுடன் வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இந்த பட்டியலையும் அவர்களுடைய பிரமாண பத்திரத்தையும் பார்த்தால் அதில் வித்தியாசம் இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் திமுக ஊழல் பட்டியல் பாகம் 2 ஐ ஜூலை 9ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் வெளியிடவில்லை.

இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 110 நாட்கள் பாதயாத்திரை நடத்தவுள்ளார். இது வரும் நாளை ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் மாலை 3 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை அண்ணாமலை சந்தித்து பேசினார். அப்போது திமுகவை சேர்ந்த 6 அமைச்சர்களின் 3 முக்கியமான ஊழல்களை அடங்கிய கோப்புகளை இரும்பு பெட்டியில் வைத்து ஆளுநரிடம் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களை ச்தித்தார் அண்ணாமலை. அவர் கூறியிருப்பதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் கொடுத்த பெட்டியில் 6 அமைச்சர்களின் சொத்து விவரங்கள் இருக்கின்றன. இந்த 6 அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே தமிழகத்தில் ஊழல் ஒழியும். அமைச்சர் பொன்முடியின் ரூ 41 கோடி வைப்பு நிதி குறித்து முதல்வர் பேசாதது ஏன்?

விளைநிலங்களில் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு என்எல்சி நிர்வாகம் வந்து பள்ளம் தோண்டியது கண்டிக்கத்தக்கது. இன்னும் 10 நாளில் அறுவடை செய்யப்படும் நிலையில் இருந்த அந்த பயிர்களை அழித்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது தெரிந்து எங்கள் மாவட்ட நிர்வாகிகளை அனுப்பி என்எல்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது மாநில அரசின் உதவியுடன்தான் இந்த பணிகள் நடப்பதாக தெரிவித்தார் என அண்ணாமலை தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+