இருக்கும் போது விஜயகாந்தை கொடுமைப்படுத்திவிட்டு! நீலிக்கண்ணீர் வடிப்பதா?.. யாரை சொல்கிறார் அண்ணாமலை
சென்னை: விஜயகாந்தை கொடுமைப்படுத்தாமல் இருந்திருந்தால் அவர் முதல்வராகியிருப்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் எனும் யாத்திரையின் ஒரு பகுதியாக அவர் ஆங்காங்கே பாஜக அரசின் சாதனை விளக்கத்தையும் எதிர்க்கட்சிகளின் தவறுகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகிறார். வரும் 2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் 3-ஆவது முறையாக பாஜக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கூறி வருகிறார்.

இந்த நிலையில் விஜயகாந்தின் கலை சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனால் அவருடைய ரசிகர்களும் தொண்டர்களும் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஆனால் அவர் உயிருடன் இருந்த போது இந்த அங்கீகாரம் கிடைத்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும் என்பதுதான் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோரின் கருத்தாக இருந்தது. இந்த நிலையில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: விஜயகாந்தை கொடுமைப்படுத்தாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் 50 ஆண்டுகாலம் உயிரோடு இருந்திருப்பார்.
அவர் உயிரோடு இருந்த போது அவரை பற்றி பேசாத அரசியல் தலைவர்களே இல்லை. இப்போது அனைவரும் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். விஜயகாந்த் மட்டும் உடல்நலத்துடன் இருந்திருந்தால் இந்நேரம் முதல்வர் ஆகியிருப்பார் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
விஜயகாந்த் 2006, 2011 ஆகிய ஆண்டில் பெற்ற வெற்றிதான் கடைசி வெற்றி. அதன் பிறகு அவருடைய கட்சியின் வாக்கு சதவீதம் குறைவாகவே இருந்து வருகிறது. கட்சியை எப்பாடுபட்டாவது நிமிர வைக்க விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் போராடி வந்தனர். ஆனாலும் அவருடைய கட்சி ஒரு இடங்களிலும் வெல்லவில்லை. கணிசமான வாக்குகளை கூட பெறவில்லை.
இதனால் கூட்டணி பேரத்தின் போது சீட்டுகளை அதிகமாக தேமுதிக கேட்டாலும் விஜயகாந்தின் வாக்கு சதவீதத்தை அரசியல் கட்சிகள் குறைத்து எடை போட்டு தேமுதிக கேட்ட தொகுதிகளை கொடுக்காமல் இருந்தது. சில அரசியல் கட்சி நிர்வாகிகள் விஜயகாந்தை மிக மோசமாக விமர்சனமும் செய்தனர்.
ஆனால் விஜயகாந்தின் இறப்பின் போது தனது அலுவலகத்திற்கு அனைத்து கட்சிகளையும் கேப்டன் வரவழைத்துவிட்டார் என பலர் பெருமிதம் பொங்க தெரிவித்தனர். மேலும் அவருக்கு இருக்கும் ஆதரவை அவர் இறந்து காட்டிவிட்டார் என்றும் தொண்டர்கள் பூரித்து வருகிறார்கள். சென்னை: விஜயகாந்தை கொடுமைப்படுத்தாமல் இருந்திருந்தால் அவர் முதல்வராகியிருப்பார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
என் மண் என் மக்கள் எனும் யாத்திரையின் ஒரு பகுதியாக அவர் ஆங்காங்கே பாஜக அரசின் சாதனை விளக்கத்தையும் எதிர்க்கட்சிகளின் தவறுகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வருகிறார். வரும் 2024 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் 3-ஆவது முறையாக பாஜக கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கூறி வருகிறார்.
இந்த நிலையில் விஜயகாந்தின் கலை சேவையை பாராட்டி அவருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இதனால் அவருடைய ரசிகர்களும் தொண்டர்களும் பொதுமக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஆனால் அவர் உயிருடன் இருந்த போது இந்த அங்கீகாரம் கிடைத்திருந்தால் பெருமையாக இருந்திருக்கும் என்பதுதான் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோரின் கருத்தாக இருந்தது. இந்த நிலையில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: விஜயகாந்தை கொடுமைப்படுத்தாமல் இருந்திருந்தால் அவர் இன்னும் 50 ஆண்டுகாலம் உயிரோடு இருந்திருப்பார்.
அவர் உயிரோடு இருந்த போது அவரை பற்றி பேசாத அரசியல் தலைவர்களே இல்லை. இப்போது அனைவரும் நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள். விஜயகாந்த் மட்டும் உடல்நலத்துடன் இருந்திருந்தால் இந்நேரம் முதல்வர் ஆகியிருப்பார் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
விஜயகாந்த் 2006, 2011 ஆகிய ஆண்டில் பெற்ற வெற்றிதான் கடைசி வெற்றி. அதன் பிறகு அவருடைய கட்சியின் வாக்கு சதவீதம் குறைவாகவே இருந்து வருகிறது. கட்சியை எப்பாடுபட்டாவது நிமிர வைக்க விஜயகாந்த், பிரேமலதா உள்ளிட்டோர் போராடி வந்தனர். ஆனாலும் அவருடைய கட்சி ஒரு இடங்களிலும் வெல்லவில்லை. கணிசமான வாக்குகளை கூட பெறவில்லை.
இதனால் கூட்டணி பேரத்தின் போது சீட்டுகளை அதிகமாக தேமுதிக கேட்டாலும் விஜயகாந்தின் வாக்கு சதவீதத்தை அரசியல் கட்சிகள் குறைத்து எடை போட்டு தேமுதிக கேட்ட தொகுதிகளை கொடுக்காமல் இருந்தது. சில அரசியல் கட்சி நிர்வாகிகள் விஜயகாந்தை மிக மோசமாக விமர்சனமும் செய்தனர்.
ஆனால் விஜயகாந்தின் இறப்பின் போது தனது அலுவலகத்திற்கு அனைத்து கட்சிகளையும் கேப்டன் வரவழைத்துவிட்டார் என பலர் பெருமிதம் பொங்க தெரிவித்தனர். மேலும் அவருக்கு இருக்கும் ஆதரவை அவர் இறந்து காட்டிவிட்டார் என்றும் தொண்டர்கள் பூரித்து வருகிறார்கள்.

Click it and Unblock the Notifications