அண்ணாமலை போட்ட டீம்.. நயினார் தலைமையில் சசிகலா புஷ்பாவும் இருக்காரே! வெள்ள பாதிப்பை ஆய்வு செய்யனுமாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தென் மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளி மண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் தென் மாநிலங்களில் கடந்த வாரம் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பதிவானது. ஒரே நாளில் 96 சென்டி மீட்டர் அளவில் பெரு மழை தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் அதிகபட்சமாக கொட்டித் தீர்த்தது. 4 மாவட்டங்களில் இருக்கும் அருவிகள், நீர் நிலைகளில் தண்ணீர் வழிந்தோடியது.

annamalai-set-team-under-nayinaar-nagendran-to-conduct-a-survey-in-southern-districts

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குடியிருப்புகளுக்கு உள்ளேயே தண்ணீர் புகுந்தது. அதி கனமழை காரணமாகவும் நீர் நிலைகளில் உடைப்பு ஏற்பட்டதாலும் தென் மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் ஏராளமான மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை உதவியுடன் தமிழ்நாடு அரசு மீட்புப் படை, தீயணைப்பு துறை, காவல் துறை, தன்னார்வலர்கள் என பலர் மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொண்டனர்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் கூறி இருப்பதாவது, "திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தால் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்பின் தீவிரத்தை முழுமையாக ஆய்வு செய்து மாநிலத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவானது உடனடியாக ஆய்வு செய்து அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

மாநில அளவிலான குழு:
1. மருத்துவர் சசிகலா புஷ்பா - மாநில துணை தலைவர்
2. பொன் பாலகணபதி - மாநில பொது செயலாளர்
3. K. நீலமுரளி யாதவ் - மாவட்ட பார்வையாளர், திருநெல்வேலி தெற்கு
4. A.N. ராஜகண்ணன் - மாவட்ட பார்வையாளர், திருநெல்வேலி வடக்கு
5. R. சித்ராங்கதன் - மாவட்டத் தலைவர். தூத்துக்குடி தெற்கு
6. வெங்கடேசன் சென்னகேசவன் - மாவட்டத் தலைவர், தூத்துக்குடி வடக்கு
7. S.P.தமிழ்ச் செல்வன் - மாவட்டத் தலைவர், திருநெல்வேலி தெற்கு
8. A.தயாசங்கர் - மாவட்டத் தலைவர், திருநெல்வேலி வடக்கு" என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+