தீபாவளி நெருங்கும் நேரத்தில் ஆவின் நெய் விலை உயர்வு! தனியாருக்கு சாதகமாக திமுக அரசு! -அண்ணாமலை
சென்னை: தீபாவளி பண்டிகை வரவுள்ள சூழலில் ஆவின் பால் பொருள்களின் விலையை உயர்த்தியிருப்பது தனியார் நிறுவனங்களுக்கு தான் சாதகமாக அமையும் என, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்கள் விரோத திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கடுமையான விலையுயர்வை மக்கள் தலையில் சுமத்துவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு நிறுவனமான ஆவின் பால் பொருள்கள் விலையை, மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தி பொதுமக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ₹70 முதல் ₹100 வரை அதிகமாகவும், வெண்ணெய் விலை கிலோவுக்கு ₹30 முதல் ₹50 வரையிலும் உயர்த்தி, சுற்றறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு இன்று (14.09.2023) முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் பொருள்களின் இந்த விலையுயர்வு, தனியார் பால் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி, பால் கொள்முதல் விலையை ₹3 மட்டும் உயர்த்திவிட்டு, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளில் பால் பொருள்கள் விலையை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது திமுக அரசு. பால் உற்பத்தியாளர்களுக்கு எந்தப் பலனும் கிடைக்காமல், ஆவின் நிறுவன பால் பொருள்கள் விற்பனை விலையை மட்டும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியிருப்பது, தனியார் பால் நிறுவனங்களை வளர்க்க, ஆவின் நிறுவனத்தையே அழித்து விட வேண்டும் என்று திமுக முடிவு செய்துள்ளதாகத்தான் தெரிகிறது
இன்னும் சில நாட்களில், தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள், வரவிருக்கின்றன. பால் பொருள்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஆவின் பால் பொருள்கள் விலையை உயர்த்தியிருப்பது, தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாகத்தான் அமையும்.
உடனடியாக, பொதுமக்களைப் பாதிக்கும் இந்த விலையுயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், ஆவின் பால் நிறுவனத்தை முடக்கும் முயற்சிகளை, மக்கள் விரோத திமுக அரசு கைவிட வேண்டும் என்றும், சார்பாக வலியுறுத்துகிகிறேன்.
-
பாஜகவில் இருந்து விலகியதும்! சென்னை திரும்ப தயாரான அண்ணாமலை! அமித்ஷா வீட்டிலிருந்து வந்த அழைப்பு! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications