எனக்கா பவர் கட்? வைக்கிறேன் பாரு அதிரடி "ஆட்டோபாம்"- அதிமுகவை அலறவிடும் அண்ணாமலையின் "ரெட் பைல்"
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்லும் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தொடர்பான அதிமுக்கிய கோப்புகளை எடுத்துச் சென்றதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணியில் கடந்த சில மாதங்களாக பெரும் விரிசல் வந்து கொண்டே இருந்தது. ஜெயலலிதாவை விமர்சித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. அப்போது தொடங்கிய அக்கப்போர், அண்ணாவை அண்ணாமலை விமர்சித்த போது இந்த பிளவு
உச்சத்தை தொட்டது. இப்படியான தொடர்ச்சியான விமர்சனங்களால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டது அண்ணா திமுக.

எடப்பாடியை ஏற்க மறுப்பு: அதேநேரத்தில் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க முடியாது என அண்ணாமலை அறிவித்ததுதான் இந்த கூட்டணி முறிவுக்கு காரணமாகவும் கூறப்பட்டு வருகிறது. டெல்லி மேலிடம் பல சமாதான முயற்சிகளை மேற்கொண்ட போது அதிமுக தலைமை இறங்கிவரவில்லை.
அண்ணாமலைக்கு அழைப்பு: இந்நிலையில் அண்ணாமலையை உடனடியாக டெல்லிக்கு வர பாஜக மேலிடம் உத்தரவிட்டது. இந்த அழைப்பை ஏற்று அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். ஆனால் டெல்லி செல்வதற்கு முன்பாக இன்று காலை முதல் அண்ணாமலை அளித்த பேட்டிகள் பெரும் சர்ச்சையையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வைத்திருக்கிறது. தமிழ்நாடு பாஜக தலைவர் பதவி தொடர்பாக, இது ஒரு பதவியே இல்லை- வெங்காயம் என்றும் தம்மை அரசியலில் இருந்து விடடுவிட்டால் விவசாயம் பார்க்கப் போவேன் எனவும் கூறியிருந்தார் அண்ணாமலை.
சர்ச்சை பிரஸ் மீட்: அத்துடன் நீங்கள் மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், பாஜகவில் தொடருவீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க, ரொம்பவே ஆடிப் போனார் அண்ணாமலை. அதனால் நிலைகுலைந்த நிலையில் செய்தியாளரை வசைபாடினார்.
அந்த கோப்பில் என்ன இருக்கு?: இதனிடையே அண்ணாமலை டெல்லி செல்லும் போது, சில கோப்புகளை கையில் எடுத்துச் சென்றதாகவும் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. இந்த கோப்புகள் குறித்து பாஜக வட்டாரங்களில் பேசிய போது, ஏற்கனவே திமுக மீது ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை அண்ணாமலை வெளியிட்டிருந்தார். திமுக ஃபைல்ஸ் போல அனைத்து கட்சி ஊழல்களை வெளியிடுவோம் எனவும் கூறியிருந்தார். தற்போதைய கோப்புகளில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் குறித்த பல முக்கிய ஆவணங்கள் இருக்கக் கூடும். இந்த கோப்புகளை டெல்லி மேலிடம் பார்த்தால் ரொம்பவே ஆடிப் போய்விடும் என்கின்றனர். என்னவா இருக்கும்?
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications