போட்டுக் கொடுத்த அண்ணாமலை.. விட்டுக் கொடுத்த நயினார்! ஏக கடுப்பில் எடப்பாடி., பரபர பாஜக கூட்டணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பாஜக கூட்டணியில் அண்ணாமலையால் சில பிரச்சனைகள் மீண்டும் முளைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அண்ணாமலை காரணமாகத்தான் கூட்டணி உடைபட்ட நிலையில் தற்போது ஓபிஎஸ், டிடிவி தினகரன் இந்திய கூட்டணியில் சேர்க்க முயன்று வருகிறார் அண்ணாமலை. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அவர் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், நயினார் நாகேந்திரன் மூலம் டெல்லி தலைமைக்கு புகார் அளிப்பியிருப்பதாக சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு மிகுந்த கவனத்தோடும் எச்சரிக்கையோடும் காய்களை நகர்த்தி வருகிறார் அதிமுக பொது செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி. 10 தோல்வி பழனிச்சாமி என திமுகவினர் விமர்சித்த நிலையில் தற்போது அதிமுகவினரே விமர்சித்து வருகின்றனர்.

காரணம் 2026 சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தால் தனது பழைய நிலைக்கே செல்ல வேண்டும் என்பதால் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என முனைப்போடு செயல்பட்டு வருகிறார். அதற்காகத்தான் உடைந்த பாஜக கூட்டணியை மீண்டும் ஒட்ட வைத்திருக்கிறார்.

Annamalai AIADMK BJP

அதிமுக பாஜக கூட்டணி

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி போட்டியிட்டு தோல்வியை சந்தித்தது. அதே நேரத்தில் மிக படுதோல்வி எனவும் சொல்ல முடியாது. தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உடைந்தது. அதற்கு காரணம் அண்ணாமலை தான். பாஜகவின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது எனக் கூறி தனிக் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் அண்ணாமலை. முன்னதாக அதிமுக தலைவர்கள் குறித்து கடுமையாக விமர்சித்ததால் அந்த கூட்டணி முடிவுக்கு வந்தது.

அண்ணாமலை சர்ச்சை

இந்த நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்து போட்டியிட்டது தான் தோல்விக்கு காரணம் எனவும், இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து இருந்தால் குறைந்தது 15 தொகுதிகளில் வென்று இருக்கலாம் என இரு கட்சியிலும் பேசப்பட்டது. இதனை மனதில் கொண்டு 2026 தேர்தலை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை எடப்பாடி பழனிச்சாமியின் நெருக்கடியால் நீக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் தலைவராக நியமிக்கப்பட்டார். நாகேந்திரன் அதிமுகவில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தி

இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே பாஜக நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்த அண்ணாமலை அடுத்தடுத்து டெல்லி பயணம் மேற்கொண்டார். மேலும் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரையும் சந்தித்து பேசினார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த இருவரையும் மீண்டும் கூட்டணியில் சேர்க்க அண்ணாமலை முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலை மீது அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் மூலம் சில தகவல்களை டெல்லிக்கு அனுப்பியுள்ளார்.

நயினார் நாகேந்திரன்

குறிப்பாக அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை கூட்டணியில் சேர்க்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி பேசி வரும் நிலையில் அவர்களை அண்ணாமலை அடிக்கடி சந்தித்து பேசுவது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும். அதிமுகவில் தனக்கு கீழே இருக்கும் நிர்வாகிகள் தற்போது இந்த விஷயத்தை சுட்டி காட்டி தன்னிடம் கேள்வி எழுப்பியதாக நாகேந்திரனரிடம் சொன்னாராம் எடப்பாடி, இந்த தகவலை டெல்லிக்கு பாஸ் செய்ய வேண்டும் என சொன்னாராம்.

தேசிய ஜனநாயக கூட்டணி

அதனை நாகேந்திரன் செய்து முடித்து இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது தான் அதிமுகவிலிருந்து சில நிர்வாகிகளை வெளியேற்றி ஒரு வலுவான அமைப்பை ஏற்படுத்த நான் முயன்று வரும் நிலையில் அண்ணாமலை இப்படி செய்வது கட்சியில் எனக்கு எதிரானவர்களை ஒன்றிணைக்கும் வாய்ப்பாக அமைந்துவிடும் எனவும், அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி தலைமைக்கு எடப்பாடி பழனிசாமி செய்தி அனுப்பி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+