இதான் ஃபர்ஸ்ட் டைம்..சாரே கொல மாஸு! 2 கோடியை தாண்டிய தவெக உறுப்பினர் எண்ணிக்கை! விஜய் செம ஹேப்பியாமே
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுள்ளது. முதல் தேர்தலிலேயே ஆட்சியை கைப்பற்றிய கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவினர் தற்போது உறுப்பினர் பலத்திலும் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக கூறி கொண்டாடி வருகின்றனர் தவெகவினர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த விஜய், அரசியலில் களமிறங்குவதாக அறிவித்தபோதே தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பு உருவானது. அதன்படி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி, ஆரம்பம் முதலே உறுப்பினர் சேர்க்கை பணிகளில் தீவிர கவனம் செலுத்தினார்.
கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே மாவட்டம் தோறும் நிர்வாகிகள் நியமனம், மாணவர் மற்றும் இளைஞர் சந்திப்புகள், ஆலோசனைக் கூட்டங்கள், மாநில மாநாடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கட்சியின் அமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விஜய்
இதனால், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக அரசியலில் ஈடுபட விரும்பும் பலர் த.வெ.க.வில் இணைந்ததனர். அரசியல் கட்சியாக உருவான பிறகு நடந்த 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலே தவெகவின் முதல் தேர்தல் களமாக அமைந்தது. அந்த தேர்தலில் கட்சி தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தமிழக அரசியலின் முக்கிய சக்தியாக மாறியது. சுமார் 34.92 சதவீத வாக்குகளை பெற்ற த.வெ.க., திமுக மற்றும் அதிமுக போன்ற பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தியது.
தமிழக வெற்றிக் கழகம்
இதன் தொடர்ச்சியாக, கடந்த மே 10-ஆம் தேதி விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றார். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை பணிகள் தொடர்ந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. கிராமம் முதல் மாநகரம் வரை உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடத்தப்பட்டதுடன், இணைய வழி பதிவு முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில், த.வெ.க. உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 2 கோடியை தாண்டியுள்ளதாக கட்சி வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனை கட்சியினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
2 கோடி உறுப்பினர்கள்
த.வெ.க. ஆதரவாளர்கள் கூறுவதன்படி, தென்னிந்தியாவில் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிகளில் மிகக் குறுகிய காலத்தில் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. எனினும், இந்த உறுப்பினர் எண்ணிக்கை தொடர்பாக சரிபார்க்கப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகள் வெளியாகவில்லை. இருப்பினும், கட்சி தொடங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே இத்தகைய எண்ணிக்கை கூறப்படுவது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
உறுப்பினர் சேர்க்கை
முதல்வராக பதவியேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்கள், நிர்வாக மாற்றங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். அதேநேரத்தில், கட்சியின் அமைப்பு பலத்தையும் வலுப்படுத்தும் பணிகள் தொடர்கின்றன. குறிப்பாக மாவட்ட அமைப்புகள், இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் பெண்கள் அணிகளை மேலும் விரிவுபடுத்தும் முயற்சிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியல்
உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமே தேர்தல் வெற்றியை உறுதி செய்யாது என்றாலும், ஒரு கட்சியின் அடித்தள அமைப்பு வலுவாக இருப்பதற்கான முக்கிய அடையாளமாக இது கருதப்படுகிறது. த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை உண்மையிலேயே 2 கோடியை தாண்டியிருந்தால், அது தமிழக அரசியலில் கட்சியின் செல்வாக்கு மேலும் அதிகரித்திருப்பதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.














Click it and Unblock the Notifications