சூத்திரனா.. ஆ.ராசா மீது அண்ணாமலைக்கு வந்த கோபம்.. ஒரு சமூகம் மீது வெறுப்பை உமிழ்வதாக கண்டனம்
சென்னை: திமுக எம்பி ஆ ராசா மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்கிறார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீடியோ வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.
நீலகிரி தொகுதியின் திமுக எம்பி ஆ ராசா இந்து மதத்தில் இருக்கும் ஏற்றத் தாழ்வகளை பற்றி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதை பாஜகவினர் ட்விட்டர் பக்கத்தில் போட்டு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வீடியோவில் ஆ ராசா பேசுகையில் உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது, நீ கிறிஸ்தவனாகவோ இஸ்லாமியனாகவோ பெர்சியனாகவோ இல்லாமல இருந்தால் நீ இந்துவாகத்தான் இருக்கும் என சொல்கிறது.

கொடுமை
இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா, இந்துவாக இருக்கும் வகை நீ சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன், இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன், இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விருமபுகிறீர்கள்?

தீண்டத்தகாதவன்
எத்தனை பேர் தீண்டத்தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தையும் முறியடிக்கிற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும் முரசொலியும் தி.க.வும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தனித் தமிழ்நாடு கேட்டார் பெரியார், ஆனால் பெரியாரை முழுமையாக ஏற்றுக் கொண்ட திமுக அதிலிருந்து விலகி ஜனநாயகத்துக்காக இந்திய ஒருமைப்பாடடுக்காக இந்தியா வாழ்க என சொல்லிக் கொண்டிருக்கிறோம் என ராசா அந்த வீடியோவில் பேசும் காட்சிகளை வைரலாகி வருகின்றன.

இந்து அமைப்புகள்
இதற்கு பாஜகவினரும் இந்து அமைப்புகளும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். ஆ ராசா வீடியோவை வெளியிட்டு தமிழக பாஜக தலைமை அண்ணாமலை ட்வீட் போட்டுள்ளார். அந்த ட்வீட்டில் தமிழகத்தில் அரசியல் பேச்சுகள் இந்த நிலையில் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. யாரையோ திருப்திப்படுத்துவதறகாக திமுக எம்பி மீண்டும் ஒரு சமூகத்தினர் மீது வெறுப்புணர்வை கக்கியுள்ளார்.

துரதிருஷ்டவசமானது
தமிழகத்தை ஆள்வதால் அது தமக்கே சொந்தம் என நினைக்கும் அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிருஷ்டவசமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் மத்திய பிரதேசத்தில் உயர்ந்த ஜாதி மற்றும் தாழ்த்தப்பட்டோர் குறித்து பேசியிருந்ததை நெட்டிசன்கள் அண்ணாமலைக்கு சுட்டி காண்பித்து வருகிறார்கள். இது பாஜகவின் அகங்கார போக்கு என தாகூரின் வீடியோ குறித்து குறிப்பிட்டுளளனர்.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
விஜய்யின் அடிமடியில் கைவைக்கும் அண்ணாமலை.. தலித் அல்லாத வாக்குகளுக்கு குறி.. புதிய ரூட் எடுக்கிறார்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications