Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா? அவரின் பொய்கள் தமிழ்நாட்டில் சந்தி சிரிக்குது.. ஷா நவாஸ் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சாவூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அபாண்டமாக பழியை கூறிய அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மதமாற்றம் நடப்பதை போன்ற பிம்பத்தை அண்ணாமலை கட்டமைத்ததாக கூறிய ஷா நவாஸ், அண்ணாமலையின் பொய் சந்தி சிரிக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி லாவண்யா, கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை, லாவண்யாவை மதமாற்றம் செய்ய முயற்சித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

Annamalai

சிபிஐ அறிக்கை

இது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பூதாகரமாகியது. இந்த நிலையில் லாவண்யா தற்கொலை தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. அதில், தஞ்சாவூர் மாணவி லாவண்யா மரணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணம் அல்ல. மாணவி பேசும் எந்தவொரு வீடியோவிலும் மதமாற்றம் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

பாஜக செய்த அரசியல்

பள்ளியில் படித்து முன்னேறிய முன்னாள் மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், யாரும் மதம் மாறவில்லை. லாவண்யாவின் தந்தை, சித்து ஆகியோர் பாஜக தலைவர்களின் நிர்பந்தத்தால் உடலை பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் மரணத்திற்கு காரணமான விடுதிக் காப்பாளர் சகாய மேரி மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளூர் ஷாநவாஸ் பேட்டி

இதனையடுத்து சமூகத்தில் மத பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வந்த அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பலரும் பேசத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் பேசுகையில், அண்ணாமலை கிளப்பிய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று மைக்கேல்பட்டி பிரச்சனை. இதனை வைத்து தமிழ்நாட்டில் மதவாத பிரச்சனையை முன்னெடுக்க முயன்றனர்.

அண்ணாமலையின் பொய்கள்

அண்ணாமலை பேசிய ஒவ்வொன்றும் அவதூறு.. அபாண்டமான பழிகள்.. அவை அனைத்தும் காலத்தால் பொய்யாக்கப்பட்டு வருகிறது. கிறிஸ்தவ கல்வி நிறுவனத்தில் மதமாற்றம் நடப்பதாக அபாண்டமான பழியை கூறினார். இதன் மூலமாக கல்வி சேவையாற்றிய ஆசிரியர்களை கைது செய்ய வைத்து, அந்த கல்வி நிறுவனத்திற்கும் நெருக்கடி கொடுத்தார்.

திருப்பரங்குன்றத்திலும் இப்படிதான்

தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ பள்ளிகளில் மதமாற்றம் நடப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். அவை அனைத்தும் பொய் என்று சிபிஐ கூறி இருக்கிறது. பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், எதுவும் விமர்சிக்க முடியாது. இதனைதான் திருப்பரங்குன்றத்திலும் செய்ய முயற்சிக்கிறார்கள். இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டி தமிழ்நாட்டை திசை திருப்புகிறார்கள்.

பாஜகவின் பொய்கள்

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த சிக்கலும் இல்லை. ஆனால் தீபம் ஏற்றவே பிரச்சனை என்பதை போல் பாஜக கூறி வருகிறது. இதேபோன்ற விவகாரத்தை தான் மைக்கேல்பட்டியில் முன்னெடுத்தார்கள். பாஜக அம்பலப்பட்டுவிட்டது.. இந்தியா முழுவதும் பாஜக சொல்லும் பொய்கள் அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் பாஜக பொய் கூறினால், சந்தி சிரிக்கும்.

அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா?

அபாண்ட பழியை கூறியதற்காக அண்ணாமலை மன்னிப்பு கேட்பாரா? பாஜக மன்னிப்பு கேட்குமா? கிறிஸ்தவ நிறுவனங்களை போல் கல்வி, மருத்துவத்தை பாஜகவால் கொடுக்க முடியுமா? சாதி, மத பாகுபாடு இல்லாமல் கல்வி, மருத்துவம் கொடுக்கும் சமூகத்தினரிடம் அண்ணாமலை, பாஜக மன்னிப்பு கேட்குமா என்பதே கேள்வி என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+