பெரும் துயரில் அம்பத்தூர்.. மீள 2 மாதங்கள் ஆகும்.. திமுக அமைச்சர்கள் வரவே இல்லையே: அண்ணாமலை காட்டம்!
சென்னை: மிக்ஜாம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிக்கு இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் சென்னை மாநகர் மட்டுமின்றி சென்னையின் புறநகர் பகுதியான அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதி முழுவதும் தண்ணீரில் மூழ்கி சென்னை நகரோடு தொடர்பையே இழந்தது. தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தாலும், இந்த மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பு மிகப்பெரியது எனக் கூறப்படுகிறது.

தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கக்கூடிய அம்பத்தூர் பகுதியில், லட்சக்கணக்கான மக்கள், இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பை நம்பி உள்ளனர். அம்பத்தூர் தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் நிறுவனங்களை சூழ்ந்த மழை வெள்ளத்தால், நிறுவனங்களில் பணிகள் கடுமையாக பாதித்துள்ளது. அம்பத்தூரில் மழை வெள்ளத்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்னாமலை, அம்பத்தூர் பகுதொ தொழில் முனைவோர்களை இன்று சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மிக்ஜம் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தமிழக பாஜக சார்பாக தொழில் முனைவோர்களை இன்று சந்தித்தோம். 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிவரும் சென்னையின் தொழிற்துறை மையமாக விளங்கும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சரியாக இரண்டு மாதங்கள் வரை ஆகும் என கூறப்படும் நிலையில் இன்று வரை திமுக அமைச்சர்கள் வராமல் இருப்பது ஊழல் திமுக அரசின் உண்மை முகத்தை காட்டுகிறது.
கடன் வாங்கி தொழில் செய்து வரும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை கூறியதோடு, தங்கள் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். நாளை தமிழகம் வரவிருக்கும் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்களிடம், கோரிக்கை மனுக்களை வழங்க ஏற்பாடுகள் செய்துள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications