Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எங்கும் எதிலும் ஊழல் மயம்..ப்ரவுட் கன்னடிகாவின் லட்சணம்..போட்டு தாக்கும் திமுக ஐடி விங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழும் நமது தமிழ்நாட்டை 'ஊழல் மாநிலம்' என்று இழித்துப் பேசி தமிழ்நாட்டையும் அதன் மக்களையும் இழிவுபடுத்தும் 'ப்ரவுட் கன்னடிகா'வின் லட்சணம் பாரீர் என்று திமுகவின் ஐடி விங்க் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. திமுக பைல்ஸ் பார்ட் - 2 ஊழல் பட்டியலை விரைவில் வெளியிடப்போவதாக அண்ணாமலை கூறி வரும் நிலையில் அதற்கு பதிலடி தரும் விதமாக திமுக ஐடி விங் தனது ட்விட்டரில் பாஜகவின் ஊழலை பட்டியலிட்டுள்ளது.

திமுகவினரின் ஊழல் பட்டியலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடப்போவதாக கூறிய அண்ணாமலை திமுகவினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டார். ஜூலை முதல் வாரத்தில் ஊழல் பட்டியல் Part-2 ரிலீஸ் பண்ணப்போவதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஜூலை 9ஆம் தேதி. எங்களுடைய நடைபயணம் ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்குகிறோம்.இந்த நடைபயணம் முழுவதுமே ஊழலை பற்றித்தான் இருக்கப்போகிறது. ஜூலை முதல் வாரத்தில், திமுக பைல்ஸ் பார்ட் - 2 வெளியிட போகிறோம் என்று கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார் அண்ணாமலை.

Annamalai vs DMK: DMK IT wing tweet against BJP leader Annamalai

இந்த நிலையில் வேலூரில் தனியார் ஊடக நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பிடிஆர் ஆடியோ உண்மை தான். இந்த இடத்தில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது எந்த தவறும் இல்லை. கட்சியிலும், ஆட்சியிலும் திமுகவின் முதல் குடும்பம் எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சொத்துகளை வாங்கி குவித்து வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பிடிஆர் வாயாலேயே 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளது. அப்படியெனில் திமுக சிஸ்டத்தில் நிச்சயம் பிரச்சினை இருக்கிறது என்று தான் அர்த்தம். அந்த ஆடியோ டேப்பை நாங்கள் பதிவு செய்யவில்லை. திமுகவிற்குள் இருந்து தான் எங்களுக்கு கிடைத்தது. கடைசியில் பிடிஆரை பலி ஆடாக மாற்றி விட்டனர். அவர் வேறொரு துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக கட்சியில் ஒருவர் கூட குரல் கொடுக்கவில்லை.

இதன்மூலம் திமுகவில் முதல் குடும்பத்திற்கு தான் அதிகாரம் இருப்பது உறுதியாகிறது என்று கூறினார். DMK files பற்றி கேட்கையில், அரசியல் லாபத்திற்காக இதை வெளியிடவில்லை. பாஜக தமிழகத்திற்கு தேவையான ஒன்று என்பதில் உறுதியாக இருக்கிறேன். எங்களால் ஊழலை தடுத்து நிறுத்த முடியும். தமிழகத்தில் 25 சதவீத நிதியானது ஊழலின் கைகளில் சிக்கிக் கொள்கிறது. எனவே யாராவது ஒருவர் எழுந்து வந்து கேள்வி கேட்க வேண்டும். திமுகவின் அதிகார அரசியலை எதிர்க்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருகிறது என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்த நிலையில் அண்ணாமலைக்கு பதிலடி தரும் விதமாக திமுகவின் ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில் பாஜகவின் ஊழல் பட்டியலை பதிவிட்டு பதிலடி கொடுத்து வருகிறது.

Annamalai vs DMK: DMK IT wing tweet against BJP leader Annamalai

போர் விமானங்கள் வாங்குவதில் ரஃபேல் ஊழல், மத்திய பிரதேசத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதில் வியாபம் ஊழல், ஹிண்டன்பர்க் வெளிப்படுத்திய அதானி ஊழல், இன்னும் இன்னும் எத்தனையோ ஊழல்களுக்கும், அதிகார துஷ்பிரயோகங்களுக்கு மத்தியில் 40% கமிஷனால் கர்நாடகத்தில் இழந்துவிட்டு, இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழும் நமது தமிழ்நாட்டை 'ஊழல் மாநிலம்' என்று இழித்துப் பேசி தமிழ்நாட்டையும் அதன் மக்களையும் இழிவுபடுத்தும் 'ப்ரவுட் கன்னடிகா'வின் லட்சணம் பாரீர்!? என்று பதிவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை, கர்நாடகாவில் பல மாவட்டங்களில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். பெங்களூர் தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனராகவும், அண்ணாமலை பணியாற்றினார். தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு விவசாயம் செய்யப்போவதாக கூறினார். பின்னர் சில மாதங்களில் பாஜகவில் இணைந்து மாநில தலைவரானார்.

பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த பிறகு, தெற்கு பெங்களூர் மண்டல காவல்துறை சார்பில் அண்ணாமலைக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில் பேசிய அண்ணாமலை, நான் எப்போதுமே பெருமைமிக்க கன்னடர். பிறந்தது வேறு பக்கம் இருக்கலாம். காவிரி பிரச்சினை வந்தபோது என்னை வேறு நபராக நீங்கள் பார்க்கவில்லை.. நீங்கள் என்னை தமிழனாக பார்க்கவில்லை.. அண்ணாமலை என்ற போலீஸ் அதிகாரியாகத்தான் பார்த்தீர்கள். எனது மாநிலத்தில் கூட இந்த அளவுக்கு மரியாதை கொடுத்திருப்பார்களா என்றால் இருக்காது என்றுதான் நினைக்கிறேன் என்று கூறினார். இதனை குறிப்பிட்டுதான் திமுக ஐடி விங் ப்ரவுட் கன்னடிகா'வின் லட்சணம் பாரீர் என்று குறிப்பிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+