திடீர் சாமியார் அன்னபூரணி நிலைமையை பார்த்தீங்களா.. போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்!
தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக பெண் சாமியார் அன்னப்பூரணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்
சென்னை: தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் சாமியார் அன்னபூரணி நேரில் புகார் அளித்துள்ளார். செல்போன், வாட்ஸ் அப் மூலம் தொடர்ந்து மிரட்டல் வருவதாகவும் அன்னபூரணி புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆதிபராசக்தி அம்மா அவதாரம் என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பெண் சாமியார் அன்னபூரணி சமீபத்தில் இணைய தளங்களில் வைரலாகி வருகிறார். செங்கல்பட்டில் அருள்வாக்கு வழங்கி வந்த அன்னபூரணியின் அருள்வாக்கு வீடியோக்கள் இணையத்தில் பரவியது.
பலரும் இவரது வீடியோவை ட்ரோல் செய்தனர். ஜனவரி 1ம் தேதி நடக்க இருந்த அன்னபூரணியின் அவதார அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அன்னபூரணி அரசு அம்மா என்பவரைக் கைது செய்யகோரி இந்து அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

கடவுளின் அவதாரம்
தமிழக இந்து சேவா சங், பாரத் முன்னணி உள்ளிட்ட 5 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அன்னபூரணி அரசு அம்மா என்ற பெயரில் போலிச் சாமியாராக வலம் வந்து தன்னை கடவுளின் அவதாரம் எனக்கூறி சொச்சைப்படுத்தும் பெண்ணை கைது செய்ய வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மூறைச்சலவை
கடவுளின் பெயரால் மக்களை மூளைச்சலவை செய்து ஏமாற்றும் அன்னபூரணி அரசு அம்மா என்பவரை மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துதல், இரு பிரிவினரிடையே மோதலை உண்டாக்கத் தூண்டுதல், மதங்களைப் பயன்படுத்தி குற்றச் செயல் புரிதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அன்னபூரணி புகார்
இந்த நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த அன்னபூரணி, புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கும் மொபைல் போன் மூலமாகவும், வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், இதனால் தனக்கும், தன் பக்தர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

உயிருக்கு அச்சுறுத்தல்
தனக்கும் தனது சீடர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை ஆன்மிக பணியில் ஈடுபடக் கூடாது என தொடர்ந்து சிலர் மிரட்டி வருவதாகவும், தொடர்ந்து வரும் மிரட்டல்கள் காரணமாக, தனது ஆன்மிக சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அன்னபூரணி அரசு அம்மா, உடனடியாக தனக்கும், தனது பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்
Recommended Video

எளிமையாக வந்தார்
வழக்கமாக பக்தர்கள் புடைசூழ பட்டுப்புடவை கட்டி மாலைகள் போட்டு பெண் சாமியார் போலவே காட்சியளிப்பார். இன்றைய தினம் மிக எளிமையாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்து விட்டு சென்றார் அன்னபூரணி.












Click it and Unblock the Notifications