ஆன்மீகம் பயந்தவனுக்கோ கோழைக்கானதோ அல்ல.. யூடியூப்பில் அன்னபூரணி "சொற்பொழிவு"!
சென்னை: யூடியூப் சேனலில் தினம் ஒரு கருத்தை பதிவிட்டு வரும் அன்னபூரணி, ஆன்மீகம் என்றால் என்ன என்பது குறித்து புதியதாக ஒரு விளக்கத்தை அளித்துள்ளது "பக்தர்களிடையே" பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னபூரணி அரசு அம்மா என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு வேறு ஒரு பெண்ணின் கணவருடன் குடும்ப நடத்துவதாக அந்த சட்ட ரீதியிலான மனைவி கொடுத்த புகாரின் பேரில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அவருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் எத்தனையோ புத்தி மதி சொல்லியும் அவர் கேட்கவில்லை. இந்த நிலையில் தன்னை ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறி கொண்டு பேஸ்புக் மற்றும் யூடியூப் சேனல்களில் பிரபலப்படுத்தி கொண்டார். கழுத்து நிறைய நகைகளுடன், மாலை அணிந்து கொண்டு அவருக்கு மக்கள் பூக்களால் அபிஷேகம் செய்கிறார்கள்.

நிகழ்ச்சி
இந்த நிலையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி திவ்ய தரிசனம் என்ற ஒரு நிகழ்ச்சிக்கு அவர் அனுமதியின்றி ஏற்பாடு செய்ததாக கூறி போலீஸார் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இதையடுத்து தனது யூடியூப் சேனல்களில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றி வருகிறார். அதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால் கனவிலிருந்து விழித்துக் கொள்ளுங்கள் என்ற ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார்.

உணர்வு என்றால் என்ன விளக்கம்
அது போல் அடுத்தது உணர்வு என்றால் என்ன? என்பது குறித்தும் அன்னபூரணி விளக்கம் அளித்து ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் ஆன்மீகம் என்றால் என்ன என்பதையும் அவர் விளக்கியுள்ளார். அதில் ஆன்மிகத்திற்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது. சாவையே நேருக்கு நேர் சந்தித்து வரவேற்கும் துணிச்சல் கொண்டது ஆன்மிகம்.

அன்னபூரணியின் ஆன்மீகம் என்றால் என்ன?
ஆன்மிகம் என்பது பயந்தவனுக்கோ, கோழைகளுக்கானதோ அல்ல. அது மனதையே தூக்கி எறியத்தெரிந்த வீரனுகானது. உயிரையே துச்சமென மதிக்கும் தீரனுக்கானது என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பலர் ஆதரவான கமென்ட்டுகளையும் எதிரான கமென்ட்டுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்.

அன்னபூரணி
தத்துவத்தை அள்ளி தெளிக்கும் அதிக உணர்வு சக்தியே போற்றி என்கிறார் ஒரு வலைஞர். அன்னபூரணி அம்மா நான் உங்களை காண மிகவும் ஆவலாக உள்ளேன், உங்களின் சீடராக வாய்ப்பு கிடைக்குமா தாயே என்கிறார். சக்தியின் உருவான அன்ன பூரணியை துதிப்பவர்களுக்கு சகல நன்மைகளும் வந்து சேரும்...!!!! என்கிறார் இன்னொரு வலைஞர். உங்கள் சக்தியை பயன்படுத்தி ஓமிக்ரானை வரவிடாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என அன்னபூரணியிடம் கோரிக்கை விடுக்கிறார் இந்த வலைஞர்.
Recommended Video

நல்லது
ஆன்மீகம் என்றால் மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல் அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒரு வகையாகும். நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு என்பதை உணர வேண்டும். அனைவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும், முக்கியமாக எதற்கும் ஆசைப்படாமல் இருத்தல் வேண்டும் என்பது முக்கியமானதாகும். இப்படி ஆன்மீகத்திற்கு இன்னும் பல அர்த்தங்கள் உள்ள நிலையில் அன்னபூரணி கூறிய விளக்கம் புதிதாக உள்ளது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications