தமிழ்நாட்டை அண்ணா தான் ஆள்கிறார்.. பாஜகவுக்கு GetOut தான் - முதல்வர் ஸ்டாலின் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் GetOut-தான் என்றும், ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார் என்றும் அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பேரறிஞர் அண்ணாவின் 57 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள பதிவில், பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!.
நினைவு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!.

Chennai Anna cm stalin

அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது கழக அரசு.

மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் #GetOut-தான்!. ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!, என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+