"நீ உயிரோடு இருக்கிறாய் அண்ணா".. அண்ணாவுக்கு வைரமுத்து புகழ் வணக்கம்
சென்னை: அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும் மரியாதை செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து அண்ணாவை நினைவு கூர்ந்து புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 57 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அண்ணாவின் நினைவு நாளையொட்டி, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அண்ணா சிலைக்கும், அவரது உருவப் படத்துக்கும் மரியாதை செலுத்தி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை வாலஜா சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது.

தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், ஆ.ராசா, திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
"வான்நீலம் உள்ளவரை
கடல் இருக்கிறது
என்று பொருள்
மாற்றங்கள் உள்ளவரை
பசி இருக்கிறது
என்று பொருள்
தமிழ்நாடு
என்ற சொல்லுக்குள்
உயிராடல் உள்ளவரை
நீ உயிரோடு
இருக்கிறாய் அண்ணா!
இருமொழிக் கொள்கையென்ற
எரிதழல் உள்ளவரை
உன் அக்கினி
அணையாது அண்ணா!
அடித்தட்டுக் கடைமனிதன்
அதிகாரம் பெறும்வரை
உன் உயிர்
உலாவிக்கொண்டிருக்கும்
அண்ணா!
பகைவர்கள்
அடிக்கடி தரும் நெருக்கடி
உன் தேவை இன்னும்
தீரவில்லை என்கிறது
தீர்க்கமாக
உன்னை அறியாமல்
உன் பெயரை மட்டுமே
அறிந்த தலைமுறை
உன் கொள்கையென்னும்
குன்றேறி நின்றால்
அடுத்த நூற்றாண்டிலும்
நீயே ஆள்வாய் அண்ணா!
யுகச் சவாரியில்
காலத்தின் கடைக்கோடிவரை
நீள்வாய் அண்ணா!
பள்ளி மாணவனாய் அழுத
கண்ணீரின் மிச்சம்
இப்போதும் கசிகிறது
கண்ணின் கடைவிழியில்
புகழ் வணக்கம்".
என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications