அண்ணாமலையின் அடுத்த “ஆண்டு” மிஸ்டேக்.. ஸ்ரீரங்கம் பெரியார் சிலை அமைக்கப்பட்டது எப்போது?லிஸ்டு நீளுதே
சென்னை: பாரதியார், கோவில்பட்டி வீரலட்சுமி, சத்ரபதி சிவாஜி, மருதமலை முருகன் கோயில் தொடர்பாக ஆண்டுகளை தவறாக சொன்ன அண்ணாமலை ஸ்ரீரங்கம் பெரியார் சிலை வைக்கப்பட்ட ஆண்டையும் தவறாக கூறியுள்ளதாக சர்ச்சை எழுந்து உள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் கோவில்பட்டி வீரலட்சுமி தொடர்பாக பேசியபோது, "ஆங்கிலேயர்கள் இருக்கும்போதே கோவில்பட்டி வீரலட்சுமி சாதியை எதிர்த்து போராடினார்." என கூறி இருந்தார். ஆனால், கோவில்பட்டி வீரலட்சுமி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 14 ஆண்டுகள் கழித்து 1961 ஆம் ஆண்டில் பிறந்தவர் ஆவார். அவர் எப்படி ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சாதியை எதிர்த்து போராடி இருக்க முடியும் என்று கேள்வி எழுந்தது.

அதேபோல், 1921 ஆம் ஆண்டு உயிரிழந்த மகாகவி பாரதியார், 1931 ஆம் ஆண்டு ஈரோட்டில் கடைசியாக உரையாற்றினார் என்று அண்ணாமலை பேசியது சர்ச்சைக்கு உள்ளானது. அதேபோல், 1962 ஆம் ஆண்டு வரை மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் தரக்கூடாது என திமுக கொள்கையோடு இருந்ததாக அண்ணாமலை பேசி இருந்தார். ஆனால், திமுக முதன்முதலில் ஆட்சிக்கு வந்ததே 1967 ஆம் ஆண்டில்தான். 1680 ஆம் ஆண்டு மறைந்த சத்ரபதி சிவாஜி சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு 1967 ஆம் ஆண்டு வந்ததாகவும் அண்ணாமலை கூறி இருந்தார்.
இந்த நிலையில்தான் ஸ்ரீரங்கம் பெரியார் சிலை அமைக்கப்பட்ட ஆண்டை அண்ணாமலை தவறாக தெரிவித்து இருப்பதாக வன்னியரசு கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது, "பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஶ்ரீரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையும் கடவுளை வணங்குபவன் முட்டாள் எனும் வாசகமும் அகற்றப்படும் என பாஜக தலைவர் திரு.அண்ணாமலை சபதம் செய்துள்ளார். பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவது ஒரு பக்கம் இருக்கட்டும். திரு.அண்ணாமலை பேசும் போது, ஶ்ரீரங்கம் கோவிலுக்கு முன் தந்தை பெரியார் வாசகம் அடங்கிய பலகை 1967 ல் வைக்கப்பட்டதாக கூறுகிறார். சிலை வைக்கப்பட்டதை தான் அப்படி சொல்லுகிறார்.
ஆனால், தந்தை பெரியார் சிலை 1967 ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வைக்கப்பட்டது? முதலில்,அது குறித்து பார்க்கலாம். 1969, ஜூன் 20 ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த தின விழா கூட்டம் ஶ்ரீரங்கம் தெற்கு வாசல் கடை வீதியில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் தான் பெரியாருக்கு சிலை வைக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது. நகர்மன்ற கவுன்சிலர் ராஜகோபால் அய்யங்கார் நகராட்சியில் முறைப்படி தீர்மானத்தை முன் மொழிகிறார். காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நகர்மன்றத் தலைவர் வெங்கடேஷ்வரா தீட்சிதர் தந்தை பெரியார் சிலை வைப்பதற்காக ஶ்ரீரங்கம் கோவிலுக்கு முன் 12 க்கு 12 எனும் அளவில் 144 சதுர அடி நிலம் ஒதுக்குகிறார்.

1973 ல் அரசாணை போடப்பட்டு 1975 ஆம் ஆண்டு அந்த நிலத்தை நகராட்சி திராவிடர் கழகத்திடம் ஒப்படைக்கிறது. நிலம் ஒப்படைக்கப்பட்டாலும்
2006 ஆம் ஆண்டு திசம்பர் 16 ல் தான் தந்தை பெரியார் சிலை அமைக்கப்படுகிறது. தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்கள் வெங்கடேஸ்வரா தீட்சிதரும் ராஜகோபால் அய்யங்காரும் தான். உண்மை இப்படி இருக்க திரு.அண்ணாமலை அவர்களோ 1967 ல் அமைக்கப்பட்டதாக சொல்கிறார். எல்லாவற்றிலும் அரை வேக்காடுத்தனமாக உளறுவதை முதலில் கை விடுங்கள் திரு.அண்ணாமலை. அப்புறம் பாஜக ஆட்சிக்கு வந்தால் சிலைகளை அகற்றுவோம் என சொல்லுவது, ஆட்டுக்குட்டி முட்டை இட்டு கோழிக்குஞ்சு வந்த கதை தான்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்!












Click it and Unblock the Notifications