புனித அந்தோனியார் தேவாலயம் திருவிழா.. மேல்நாரியப்பனூரில் நின்று செல்லும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்!
சென்னை: புனித அந்தோனியார் தேவாலயம் திருவிழாவையொட்டி சென்னை எழும்பூர்-சேலம் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமாக கோயில் திருவிழாக்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். திருவண்ணாமலை கிரிவலத்துக்கு சென்னையிலிருந்தும், விழுப்புரத்திலிருந்தும் அடிக்கடி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதனை தொடர்ந்து, தற்போது தேவாலய திருவிழாவுக்காக சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வரை இயக்கப்படும் ரயில் விழுப்புரம் அருகே உள்ள மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. இக்கோயிலின் ஸ்தல வரலாற்றை பொறுத்த அளவில், சுமார் 1845ம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போதிலிருந்து இப்போது வரை கோயிலின் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த ஆண்டும் திருவிழா சிறப்பாக நடத்தப்பட இருக்கிறது. இந்த கோயிலுக்கு செல்பவர்கள் வழக்கமாக விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் மூலமாக வருவார்கள். விருத்தாசலம் - சேலம் பயணிகள் ரயில் காலை 07.15 மணி, காலை 11.30 மணி, மாலை 02.30 மணி, இரவு 08.30 மணி ஆகிய நேரங்களில் மேல்நாரியப்பனூர் வந்து சேரும்.
இது தவிர காரைக்கால் - பெங்களூர் ரயில் காலை 11.30 மணி, பெங்களூரு - காரைக்கால் ரயில் மாலை 03.00 மணிக்கும் திருவிழா நாட்களில் மேல்நாரியப்பனூர் நின்று செல்லும். கள்ளக்குறிச்சி - சேலம் சென்னை நெடுஞ்சாலையில், V கூட்ரோடு இறங்கி, அங்கிருந்து ஷேர் ஆட்டோ மற்றும் மினிபஸ் மூலம் இந்த தேவாலயத்திற்கு வந்து சேரலாம்.
இப்படி இருக்கையில் எழும்பூர்-சேலம் ரயில் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதாவது, ரயில் எண் 22153 கொண்ட எழும்பூர்-சேலம் சூப்பர் ஃபாஸ்ட் ரயில் ஜூன் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த 4 நாட்களும் சென்னை எழும்பூரிலிருந்து இரவு 11.55க்கு இந்த ரயில் புறப்படுகிறது.
இந்த ரயில் இந்த நான்கு நாட்களும் மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும். அதிகாலை 4.19க்கு மேல்நாரியப்பனூர் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும் ரயில், ஒரு நிமிடம் கழித்து 4.20க்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சமீப காலமாக தெற்கு ரயில்வேயின் நடவடிக்கைகள் ரயில் பயணிகளால் பெரிதும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை கடற்கரை டூ திருவண்ணாமலை பாசஞ்சர் ரயில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
அதாவது தினமும் சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் வரை சென்று அங்கிருந்து பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மதிமங்கலம், போளூர் என திருவண்ணாமலை வரை இரவு 12.05க்கு சென்று சேரும் வகையில் இயக்கப்படும்.
அதேபோல, திருவண்ணாமலையிலிருந்து விடியற்காலை 4 மணிக்கு வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications