களைகட்டும் ஓணம் கொண்டாட்டம்! வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! ரெடியா இருங்க
சென்னை: ஓணம் பண்டிகை காரணமாக வார விடுமுறையான நாளை, வழக்கம்போல வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாபலி மன்னனின் வருகையை கொண்டாடும் விதமாக கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது அத்திப்பூ கோலமிட்டு கேரள மக்கள் மகாபலி மன்னனை வரவேற்கின்றனர். 10 நாட்களும் வித்தியாசமான பூக்கள் கொண்டு கோலமிடப்படும்.

அதேபோல ஆறு சுவைகளில் 64 வகையான உணவுகள் தயாரிக்கப்படும். இது ஓண சாத்யா என்று அழைக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின் போதுதான் இதுபோன்ற உணவுகளை மாநிலம் முழுவதும் மக்கள் தயாரிப்பார்கள். அதேபோல பெண்கள் கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடுவார்கள். கேரளா மட்டுமல்லாது மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை வழக்கம்போல செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 1,00 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பூங்காவை மாநில அரசும், வனத்துறையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 160 ஆண்டுகள் பழமையான இந்த பூங்காவில் தற்போது இல்லாத உயிரினங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான உயிரினங்களை வண்டலூர் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
பட்டாம்பூச்சிகள் தொடங்கிய அரிய வகை பறவைகள், புலி, சிங்கம், ஒட்டகச்சிவிங்கி, நீர் யானை என ஏராளமான உயிரினங்கள் இங்கு இருக்கின்றன. இவற்றை பராமரிக்கவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் இரவும் பகலுமாக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குழந்தைகள் மற்றும் மக்கள் மத்தியில் வன விலங்குகள் குறித்தும் சூழலியல் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்த பூங்கா பெரிதும் உதவி புரிந்து வருகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 180 வகைகளை சேர்ந்த 2,500 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவுக்கு என தனி வரலாறு உள்ளது. இந்த வரலாறே பூங்காவின் தனிச்சிறப்பு என்று கூறலாம். இந்த பூங்கா 1854ல் ஒரு சிறுத்தை மற்றும் புலியுடன் தொடங்கப்பட்டது. முதலில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள புறநகர் ரயில் நிலையத்திற்கு பின்னால் அமைந்திருந்தது. ஆனால் இப்பகுதியில் ஏற்பட்ட ஒலி மாசு காரணமாக 1975ல் இது வண்டலூருக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த பூங்காவின் உண்மையான வயது 168.
பூங்காவில் உள்ள உயிரினங்களை 24 மணி நேரமும் நேரலையில் மக்கள் கண்டுகளிக்கும் வசதியும் உள்ளது. பூங்காவில் புதியதாக 'நீர்வாழ் உயிரின காட்சி சாலை' ரூ.23 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. பொதுவாக விழா நாட்கள், பண்டிகை தினங்களில் இந்த பூங்கா விடுப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக வார விடுப்பு தினமான நாளை வண்டலூர் பூங்கா வழக்கம் போல செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications