ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. மேலும் 3 பேர் கைது.. ஷாக்கிங் பின்னணி
சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தற்போது வரை மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் .
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் வீடு கட்டி வந்தார். கடந்த 5ஆம் தேதி அந்தப் பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது அவர் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார். அந்த படுகொலை அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டம் ஒழுங்கு குறித்தும் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு , திருவேங்கடம் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் 5 பேர் வழக்கறிஞர்கள் மற்றும் திமுக, அதிமுக, பாஜக, தாமக, தேமுதிக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவேங்கடம் போலீஸ் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று ஆற்காடு சுரேஷின் நெருங்கிய உறவினர் பிரதீப் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் ஊர்காவல் படையில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்ஸ்ட்ராங்கின் நடவடிக்கைகளை கண்காணித்து தகவல் கொடுத்துள்ளார்.
இந்த வழக்கின் முக்கியப்புள்ளியாக கருதப்படும் சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இன்று மேலும் 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். விக்னேஷ் என்கிற அப்பு, விஜயகுமார், முகுந்தன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி தர்மராஜ் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூலம் வெடிகுண்டு சப்ளை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள், இவர்கள் மூலமாக சப்ளை செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீதமுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
-
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
ஒவ்வொன்றும் ஒரு வெடி குண்டுக்கு சமம்.. சங்கீதா கையில் அந்த வீடியோ ஆதாரம்.. வசமாக சிக்கும் விஜய்! -
2025க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் ஜாக்பாட் வருமா? பென்சன் வழக்கில் ஐகோர்ட் நோட்டீஸ் -
Vijay: வதந்திகளுக்கு பதிலடி! ஷாலினியுடன் சங்கீதா.. அஜித் வீட்டில் விஜய்! லீக்கான வீடியோ -
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை ஸ்தம்பித்தது.. என்ன காரணம்.. தாம்பரம் போலீசாருக்கு பறந்த கோரிக்கை -
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா! சிறுவயது ஆசைக்காக ராஜ்யசபா எம்பியாகிறார்.. அவரே தந்த விளக்கம் -
விஜய்கிட்ட ஒன்னுமேயில்லை..இன்னும் 10 வருஷம் போகட்டும்! அடம் பிடித்த ராகுலை கார்கே சமாளித்தது எப்படி? -
Vijay Trisha: ஜோடியாக வந்த விஜய் திரிஷா.. சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி.. ஒரே காரில் வந்து பங்கேற்பு -
சங்கீதா விஷயத்தை விட பெரிய சிக்கல்.. அவ்வளவு தூரம் வாக்குறுதி கொடுத்தீர்களே.. புலம்பி கொட்டிய விஜய் -
உலகின் முன்னணி சரக்கு கப்பல் நிறுவனம் வெளியிட்ட அலர்ட்! மொத்த உலகமும் ஸ்தம்பிக்கப்போகுது! -
ராஜ்யசபா எம்.பியாகும் அன்புமணி.. மிக இளம் வயது கேபினட் அமைச்சர் - அட்டெண்டென்ஸ் சர்ச்சை.. யார் இவர்? -
பெங்களூரில் மருமகளை சமையல் செய்ய வேண்டாம் என்ற மாமியார்.. அதுக்கு இப்படியா செய்வாங்க












Click it and Unblock the Notifications