Low Pressure: வங்க கடலில் உருவாகிறது இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. தேதி குறித்த வானிலை மையம்! இனி கனமழை விடாது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 22 ஆம் தேதி வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வரும் 21, 22 ஆம் தேதி கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

ஏற்கனவே கடந்த 14 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் அடுத்த ஒரு வாரத்துக்கு கனமழை தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது.

another-low-pressure-area-likely-over-bay-of-bengal-on-nov-22-heavy-to-very-heavy-rain-expected

காற்றழுத்த தாழ்வு பகுதி

தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது. தற்போது இலங்கை நிலப்பரப்புக்கு மேல் பகுதியில் நிலவுகிறது என்றும், மன்னர் வளைகுடா நோக்கி லேசாக நகர தொடங்கியதும் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

அதாவது இன்று பிற்பகலுக்கு பிறகு மழை தீவிரமடையும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது.

மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்த நிலையில் தான் தற்போது வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வரும் 22 ஆம் தேதி வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.

கனமழை விடாது

இதனால் தமிழகத்தில் வரும் 21, 22 ஆம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும். கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறுகையில், அடுத்தடுத்து உருவாகும் 3 காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் மாதம் இறுதி முழுவதும் கனமழை பெய்யும். குறிப்பாக சென்னையில் இருந்து குமரி வரை கடலோர மாவட்டங்களில் எல்லாம் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்களிலும் மழை பரவலாக பெய்யும் என்று கூறியிருந்தார்.

புயல் உருவாக சான்ஸ்

இதேபோல் புயல் உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். முதல் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 18 ஆம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும், இரண்டாவது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் 20 முதல் 23 ஆம் தேதி அல்லது அதற்கு மேல் கனமழையும், மூன்றாவது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் நவம்பர் மாத இறுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என கூறியிருந்தார்.

3 வது உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதியே புயலாக மாற வாய்ப்பு உள்ளது எனவும், எனினும் அடுத்தடுத்த நாட்களில் தான் இது பற்றி உறுதியாக சொல்ல முடியும் எனவும் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+