"இது என்ன சார்!" தமிழ் படிக்க தெரியாமல் விழித்த மற்றொரு நாம் தமிழர் வேட்பாளர்! எங்கு தெரியுமா
சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் திருவள்ளூரில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகதீஸ் சுந்தர் என்பவர் வேட்புமனு தாக்கலின் போது தமிழ் படிக்க முடியாமல் திணறிய வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. கடந்த காலங்களைப் போலவே இந்த முறையும் புதுச்சேரி சேர்த்து 40 இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களமிறங்குகிறது.

நாம் தமிழர்: நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் சின்னதில் நாம் தமிழருக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதைப் பற்றிக் கவலைப்படாமல் சீமான் தனது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
அதன்படி திருவள்ளூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஸ் சுந்தர் என்பவர் போட்டியிடுகிறார். அவர் ME (Aero), LLB படித்துள்ளார். இவர் முகப்பேரில் உள்ள பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்யச் சென்றுள்ளார். அப்போது தான் அவர் தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
தமிழ் தெரியாமல்: அதாவது வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். ஆனால், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெகதீஸ் சுந்தர் தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியுள்ளார். வேட்புமனுத் தாக்கலின்போது, தமிழில் எழுதி இருந்த உறுதிமொழிப் பத்திரத்தைப் படிக்கத் தெரியாமல் ஜெகதீஸ் சுந்தர் திக்கி நின்றார். முதலில் ஓரிரு வரிகளை அவர் வாசித்த நிலையில், அடுத்த என்னது எனத் தெரியாமல் திணறினார்.
அவர் தொடர்வார் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் சில நொடிகளில் காத்திருந்திருந்தார். இருப்பினும், ஜெகதீஸ் சுந்தரால் தமிழ் படிக்க முடியவில்லை. இதையடுத்து தமிழில் இருந்த உறுதிமொழியை ஒவ்வொரு வரியாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் வாசிக்க, அதனைத் திரும்பச் சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார் ஜெகதீஸ் சுந்தர். முன்னதாக விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளரும் இதேபோல தமிழ் படிக்கத் தெரியாமல் திணறியது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளூர்: திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் கெகதீஸ் சுந்தர் போட்டியிடும் நிலையில், இந்த முறை அங்கே திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் களமிறங்குகிறார். அதேபோல அதிமுக சார்பில் முன்னாள் எழும்பூர் எம்எல்ஏ நல்லதம்பி போட்டியிடும் நிலையில், பாஜக சார்பில் பொன் வி பாலகணபதி போட்டியிடுகிறார்.
அங்கே கடந்த 2019 லோக்சபா தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் சார்பில் கே ஜெயக்குமாரும் அதிமுக- பாக கூட்டணி சார்பில் பி வேணுகோபாலும் போட்டியிட்டார். மக்கள் நீதி மய்யம் சார்பில் லோகநாதன், நாம் தமிழர் வெற்றிசெல்வி ஆகியோரும் களத்தில் இருந்தனர். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயக்குமார் 7.67 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 3.57 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றார். நாம் தமிழர் வேட்பாளர் 65,416 வாக்குகளைப் பெற்று நான்காம் இடத்தையே பிடித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications