அம்மு! லதா! வைதேகி! வரிசையாக லிஸ்ட் போட்ட நிர்மல்! பாஜகவிற்கு 2 நாளில் செக்! அண்ணாமலை என்ன செய்வார்?
நிர்மல் இப்படி அடுத்தடுத்து அதிமுகவிற்கு பாஜக நிர்வாகிகளை கொண்டு வருவதால் பாஜக தரப்பினர் பலர் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: பாஜகவில் இருந்து நேற்று ஒரு படை அதிமுகவில் இணைந்த நிலையில் இன்று இன்னொரு படை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தது. நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்த நிலையில் தற்போது வரிசையாக பல நிர்வாகிகள் வெளியேற தொடங்கி உள்ளனர்.
பாஜகவின் ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல் குமார் திடீரென பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். அதோடு எடப்பாடி பழனிசாமியை.. எடப்பாடியார் என்று வாழ்த்தி.. அண்ணாமலையை கடுமையாக தாக்கி உள்ளார்.
மேலும் தனக்கு நெருக்கமான பல நிர்வாகிகளை அதிமுக நோக்கி அவர் இழுத்து வருகிறார்.

திலீப் கண்ணன்
நேற்று அண்ணாமலையை விமர்சனம் செய்த திலீப் கண்ணனும் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்து உள்ளார். அண்ணாமலையை கடுமையாக தாக்கிய திலீப் கண்ணன் தனது போஸ்டில், இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை.. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திட கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்றுவரை சீன் போட்டுட்டு இருக்கார். தன்னை சுத்தமானவர் நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடி கும்பலை கட்சியில் வைத்துள்ளார்,. தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன் அவரை முதலில் காலி செய்தார்... என்பது உள்ளிட்ட புகார்களை வைத்து உள்ளார்.

பாஜகவினர் இணைந்தனர்
நேற்று OBC அணியின் மாநில செயலாளர் ஜோதி, முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், , திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் குவிந்து எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தனர். இந்த நிகழ்வில் எடப்பாடி மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டார். இந்த நிலையில் இன்று மேலும் ஒரு டீம் எடப்பாடி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து உள்ளது.
லதா - பாஜக மாநில செயலாளர்,உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு
வைதேகி - பாஜக ஒன்றிய தலைவர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு, தாம்பரம் ஆகியோர் பாஜகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளனர். நிர்மல் குமாரின் இந்த தொடர் அதிரடிக்கு அண்ணாமலை எப்படி பதிலடி கொடுப்பார் என்று கேள்வி எழுந்துள்ளது.

அண்ணாமலை கிண்டல்
பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து பலர் அதிமுகவில் இணைவது குறித்த கேள்விக்கு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்றுதான் காட்டமாக பதில் அளித்து இருந்தார். அதில், பாஜகவினரை இழுத்தால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலை வந்துவிட்டது. அந்த அளவிற்கு திராவிட கட்சிகளின் நிலை உள்ளது. திராவிட கட்சிகளை நம்பித்தான் பாஜக இருந்தது என்று கூறி வந்தனர். திராவிட கட்சிகளில் இருந்து ஆட்களை அழைத்து நாங்கள் கட்சி நடத்தியதாக கூறி வந்தனர். ஆனால் இப்போது பாருங்கள். பாஜகவை நம்பி திராவிட கட்சிகள் உள்ளன. திராவிட கட்சிகள் இப்போது யாரை நம்பி இருக்கிறார்கள்.

திராவிட கட்சிகள்
எங்களின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் அங்கே சென்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களை திராவிட கட்சிகளும் ஏற்றுக்கொண்டு உள்ளன. எங்களின் வயசு என்ன? அவர்களின் வயசு என்ன? எங்களை நம்பி அவர்கள் இருக்கிறார்கள்.. நாங்கள் எத்தனை முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம். அவர்கள் எத்தனை முறை இருந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாங்கள் வளர்ந்து இருக்கிறோம் என்பதைத்தான் இது காட்டுகிறது. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கும், கட்சியில் இருந்து போனால் தான் புதியவர்களுக்கு பொறுப்பு தர முடியும். அப்படித்தான் புதிய தலைவர்களுக்கு பதவி அளிக்க முடியும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications