கொங்கு மண்டலத்தில் அதலபாதாளத்திற்கு செல்லுமாம் அதிமுக? 50-ல் 18தான் கிடைக்குமாம்! ANS Survey!
சென்னை: மேற்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 50 தொகுதிகளில் 32 தொகுதிகளை திமுக கைப்பற்றும் என ஏஎன்எஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் அதிமுகவின் கோட்டையை திமுக கைப்பற்றுகிறது என்ற கணிப்பு அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 வாரங்களே உள்ள நிலையில், கள நிலவரம் குறித்த பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இதில் ஏஎன்எஸ் எனப்படும் அக்னி நியூஸ் சர்வீஸ் என்ற அமைப்பு கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, அதிமுகவின் எஃகு கோட்டையாகக் கருதப்படும் மேற்கு மண்டலம் (கொங்கு மண்டலம்) குறித்த ஏஎன்எஸ் (ANS) ஆய்வு நிறுவனத்தின் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அக்னி நியூஸ் சர்வீல் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் மார்ச் 12 ஆம் தேதி வரை நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன் விவரங்களை பார்க்கலாம்.
கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 44.9 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலை வகிக்கும் என தெரிவித்திருந்தனர். அது போல் அதிமுக 38.5 சதவீதம் வாக்குகளை பெறும்.
முதல்முறையாக களம் காணும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 9.7 சதவீத வாக்குகளை பெறும். சீமானின் நாம் தமிழர் கட்சி 4.8 சதவீத வாக்குகளை பெறும். நோட்டாவுக்கு 2.1 சதவீதம் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணி 180 -க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என்றும் அதிமுக மட்டும் 54 தொகுதிகளில் வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் திமுக வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
கருத்துக் கணிப்பில் நடந்தது என்ன?
ஏஎன்எஸ் நடத்திய விரிவான கள ஆய்வின்படி, மேற்கு மண்டலத்தில் உள்ள மொத்தத் தொகுதிகளில் ஆளும் கட்சியான திமுக கூட்டணி 32 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதேசமயம், பாரம்பரியமாக இந்தப் பகுதியில் பலம் வாய்ந்த அதிமுக கூட்டணிக்கு 18 இடங்கள் மட்டுமே கிடைக்கக்கூடும் என இந்த ஆய்வு கூறுகிறது.
அரசியல் நிபுணரின் பார்வை - ஏன் இந்த மாற்றம்?
இந்தக் கணிப்பு உண்மையாகும்பட்சத்தில், அது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறியாக அமையும். இதனை ஒரு அரசியல் நிபுணரின் கோணத்தில் அணுகினால் மூன்று முக்கியக் காரணங்கள் புலப்படுகின்றன.
அரசுத் திட்டங்களின் தாக்கம்: கடந்த ஐந்து ஆண்டுகளில் மேற்கு மண்டலத்தில் செயல்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள், தொழில் வளர்ச்சி மற்றும் மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் போன்ற திட்டங்கள் திமுகவின் வாக்கு வங்கியை இந்தப் பகுதியில் கணிசமாக உயர்த்தியிருக்கலாம்.
கூட்டணி பலம்: திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொமதேக போன்ற உள்ளூர் செல்வாக்கு மிக்க கட்சிகள் மற்றும் இடதுசாரிகளின் வாக்குகள் திமுகவின் வெற்றி வாய்ப்பை 32 தொகுதிகள் வரை கொண்டு செல்ல உதவியிருக்கக் கூடும்.
சொந்த மண்ணில் சறுக்கல் ஏன்
அதிமுகவின் சறுக்கல்: எடப்பாடி பழனிசாமியின் சொந்த மண்ணிலேயே அதிமுக 18 இடங்களுக்கு சுருங்கும் எனக் கணிக்கப்படுவது அக்கட்சிக்கு ஒரு எச்சரிக்கை மணியாகும். குறிப்பாக, பாஜக மற்றும் பாமக உடனான தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இழுபறிகளும், சிறுபான்மையினர் மற்றும் நடுநிலை வாக்காளர்களின் மனமாற்றமும் அதிமுகவின் கோட்டையில் விரிசலை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது.
2021 மேற்கு மண்டலம்
கடந்த 2021 தேர்தலில் மேற்கு மண்டலம் தான் அதிமுகவை ஒரு வலுவான எதிர்க்கட்சியாக அமர வைத்தது. ஆனால், தற்போது ஏஎன்எஸ் கணிப்பின்படி திமுக 32 இடங்களை எட்டினால், அது எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்குக் கடும் சவாலாக அமையும். இருப்பினும், தேர்தல் களம் என்பது கடைசி நேரப் பிரச்சாரங்கள் மற்றும் பணப்பரிமாற்றங்களால் மாறக்கூடியது என்பதால், பெரும்பான்மையான தொகுதிகளைத் தக்கவைக்க அதிமுக மும்முரமாகக் களப்பணியாற்றி வருகிறது.
-
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை












Click it and Unblock the Notifications