சி.ஏ.ஏ. போராட்டம்: உள்நாட்டு யுத்தத்தை உருவாக்க பொய்களை பரப்பும் ஜின்னாவின் கைக்கூலிகள்- ஹெச். ராஜா
Recommended Video
சென்னை: உள்நாட்டு யுத்தத்தை உருவாக்க பொய்களை முகமது அலி ஜின்னாவின் கைக்கூலிகள் பரப்புகின்றனர் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ஹெச். ராஜா பதிவிட்டுள்ளதாவது:

முகமது அலி ஜின்னா என்ன மிரட்டினாரோ அதை செயல்படுத்துவதற்காக ஜின்னாவின் கைக்கூலிகள் பாரத நாடு முழுவதும் உள்நாட்டு யுத்தத்தை உருவாக்குவதற்காக பொய்களை பரப்பி போராட்டம் என்கிற பெயரிலே வன்முறையை கலவரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு ஹெச். ராஜா பதிவிட்டுள்ளார். சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை ஹெச். ராஜா இவ்வாறு குறிப்பிட்ட்டுள்ளார்
அவரது பதிவுக்கு வழக்கம் போல ட்வீட்டிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பதிவிட்டும் வருகின்றனர். @AKombiah என்ற பதிவர், அமாங்க ஐயா, அதே மாதிரி கோட்செ ஆதரவாளர்களும் ரெம்ப இடஞ்சல் பன்ராங்க. அதை கண்டித்து பதிவு செய்யுங்கள் என கிண்டலடித்துள்ளார்
@maran4u என்ற ட்வீட்டிஸ்ட் ஜின்னா நல்லவர் என்று பாகிஸ்தான் சென்று கூறிய அத்வானி யாருடைய கைக்கூலி? என கேள்வி எழுப்பியுள்ளார்.
முகமது அலி ஜின்னா என்ன மிரட்டினாரோ அதை செயல்படுத்துவதற்காக ஜின்னாவின் கைக்கூலிகள் பாரத நாடு முழுவதும் உள்நாட்டு யுத்தத்தை உருவாக்குவதற்காக பொய்களை பரப்பி போராட்டம் என்கிற பெயரிலே வன்முறையை கலவரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
— H Raja (@HRajaBJP) February 7, 2020
@Ramasub73347040 என்ற நெட்டிசன், இரண்டாவது முறையா ஆட்சில இருக்கீங்க. இன்னும் முஸ்லீம் பாகிஸ்தான், தேசதுரோகி பேசுறத விட்டுட்டு, நாட்டுக்கு நல்லது செய்யுங்க சார் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
@sarasaraathi முகமதுஅலிஜின்னாஉட்பட இம்மண்ணின் சுதந்திரத்திற்காகபோராடியோரை அலட்சியபடுத்தி தனிமைப்படுத்தி தனிநாடுகேட்கதூண்டிய அதே மதவாத அதிகாரம் இன்றும் அதே வேலையை செய்து மக்களை துண்டாடிக்கொண்டிருக்கின்றது.அந்த மதவெறிகொண்ட அதிகாரத்தை இம்முறைஒடுக்கிவிட்டால் இந்தியநாடு அமைதியானநாடாக இருக்கும் என பதில் கொடுத்திருக்கிறார்.
-
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்










Click it and Unblock the Notifications