தவெக இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கலையே! தமிழகத்திலும் வெடித்த போராட்டம்.. கைது நடவடிக்கையில் போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடக்க தொடங்கியிருக்கின்றன. ஆனால், போராடுபவர்களை போலீசார் கைது செய்வதால்.. தவெக அரசு இந்த போராட்டத்திற்கு எதிரானதாக இருக்கிறதா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

SIR நடவடிக்கையின் மூலம் கோடிக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். அதன் பின்னர் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால், SIR விஷயத்தை தலைமை தேர்தல் ஆணையர் மட்டும் தன்னிச்சையாக முடிவெடுத்து நடைமுறைப்படுத்தியிருக்கிறார். மற்ற 2 தேர்தல் ஆணையர்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. தன் இஷ்டத்துக்கு முடிவெடுக்க அவர் எதுக்கு? என்று கேள்வி கேட்டுள்ள காக்ரோச் ஜனதா கட்சி (CJP), SFI, AISA, DYFI உள்ளிட்ட அமைப்புகள்.. அவர் பதவி விலக வேண்டும் என்று டெல்லியில் போராடி வருகின்றன.

Anti CEC Protests

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக இன்று காலை சென்னை பெசன்ட் நகரில் இளைஞர்கள் போராட்டத்தை நடத்தினர். ஆனால், கடமையே கண்ணாக இருக்கும் பொலீசார், சர்வதேச குற்றவாளிகளை கைது செய்வதை போல.. எங்களை கைது செய்தனர் என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். அதேபோல சேலம் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற AIYF-AISF மாணவர், வாலிபர் அமைப்பினரையும் போலீசார் தடுத்து நிறுத்தியிருக்கின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடந்துவிடவே கூடாது என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருக்கிறாரா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+