லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு... எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை: அமைச்சராக இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள், நண்பர்களின் நிறுவனங்களுக்கு மட்டுமே அளித்ததாக எஸ்.பி. வேலுமணி மீது புகார் எழுந்துள்ளது. எஸ்.பி வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் 35க்கும் மேற்பட்ட இடங்களிலும் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் மொத்தமாக 52க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர்.

அரசு ஒப்பந்தப் பணிகள் வாங்கி தருவதாக கூறி ரூ. 1.20 கோடி மோசடி செய்து விட்டதாக எஸ்.பி வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் அமைச்சராக இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதும் அவரது சகோதரர் அன்பரசன், உறவினர் சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திமுகவின் ஆர்.எஸ் பாரதி, அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்.பி வேலுமணி தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். எம்எல்ஏ விடுதியில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கேசிபி என்ஜினியர் பிரைவேட் லிமிடெட், கேசிபி இன்ப்ரா லிமிடெட், ஸ்ரீமகாகணபதி ஜூவல்லர்ஸ், ரத்னா லட்சுமி ஹோட்டல்ஸ், எசிஇ டெக் மெசினரி, ஆலாம் கோல்ட் அன் டயமன்ட்ஸ் உள்ளிட்ட 8 நிறுவனங்களின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஸ்.பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதாக எழுந்த தகவலை அடுத்து கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் இல்லத்தில் அதிமுக தொண்டர்களும் உறவினர்களும் திரண்டனர். தி.மு.க அரசுக்கு எதிராக முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications