Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி போனஸை விடுங்க.. இரண்டு மடங்காக உயர்த்தப்பட்ட சம்பளம்! "அவங்களுக்கு" ஸ்டாலின் தந்த குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு விரைவில் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில்.. சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்குரைஞர்களின் சம்பள இரண்டு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசு வழக்குரைஞர்களுக்கு வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.10.2023) தலைமைச் உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட செயலகத்தில், சென்னை குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திடும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி வழங்குவதற்கான அரசாணையை விழுப்புரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் திரு.டி.எஸ். சுப்ரமணியன், சென்னை மாநகர குற்றவியல் அரசு வழக்குரைஞர் திரு. தேவராஜன், இராமநாதபுரம் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் திரு. கார்த்திகேயன் மற்றும் சென்னை மாநகர உரிமையியல் அரசு வழக்குரைஞர் திரு. ஷாஜகான் ஆகியோரிடம் வழங்கினார்.

Apart from Deepavali bonus, Now the government lawyers salary hike twice by CM Stalin

சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் மாவட்ட குற்றவியல், உரிமையியல், சார்பு நீதிமன்றங்கள் மாஜிஸ்திரேட் மற்றும் முன்சீப் நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இந்நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கினை நடத்திட அரசு வழக்குரைஞர்கள் பலர் நியமிக்கப்பட்டு, சுமார் 700-க்கும் மேற்பட்ட அரசு வழக்குரைஞர்கள் அரசு சார்பாக வழக்கினை நடத்தி வருகின்றனர். இந்நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தும் அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதம் 1995-ஆம் ஆண்டிற்குப் பிறகு மாற்றி அமைக்கப்படாமல் இருந்தது.

( லாஸ்ட் நொடியில்.. கிளம்பாத ஸ்டாலின்.. கனிமொழி வார்த்தையால் இறுக்கமான சோனியா முகம்.. என்னாச்சு?)

அரசு வழக்குரைஞர்: முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2006-ஆம் ஆண்டு பதவியேற்றதும், அரசு வழக்குரைஞர்களின் கட்டண விகிதத்தை மாற்றி அமைத்திட 2007-ஆம் ஆண்டு ஒரு குழுவை அமைத்து, அக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 2011ஆம் ஆண்டு கட்டண விகிதம் கணிசமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது. 2011-ஆம் ஆண்டிற்குப்பின், 10 வருட காலம் கட்டண விகிதம் ஏதும் மாற்றி அமைக்கப்படவில்லை.

Apart from Deepavali bonus, Now the government lawyers salary hike twice by CM Stalin

அரசு வழக்குரைஞர்களின் பங்களிப்பு மற்றும் பணிப்பளுவினை கருத்திற்கொண்டு இவர்களது கட்டண விகிதத்தை மாற்றி அமைப்பது அவசியம் எனக் கருதி அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் திரு. அசன் முகம்மது ஜின்னா அவர்கள் அளித்த பரிந்துரை கடிதத்தை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைத்தார். இதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், வழக்குரைகளின் கட்டண விகிதத்தை இரு மடங்காக உயர்த்தி அரசு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் உயர்நீதிமன்றம் தவிர்த்த அனைத்து நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளை நடத்தும் அனைத்து அரசு வழக்குரைஞர்களும் பயன் பெறுவார்கள். வழக்கறிஞர்கள் இடையே இந்த அறிவிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் திரு. எஸ். இரகுபதி, தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் திருமதி பெ. அமுதா, இ.ஆ.ப., அரசு தலைமைக் குற்றவியல் வழக்குரைஞர் திரு. அசன் முகம்மது ஜின்னா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+