லாஸ்ட் நொடியில்.. கிளம்பாத ஸ்டாலின்.. கனிமொழி வார்த்தையால் இறுக்கமான சோனியா முகம்.. என்னாச்சு?
சென்னை: கனிமொழி நடத்திய திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டிற்கு வந்திருந்த சோனியாவை சந்தித்து சீட் ஷேரிங் பற்றி விவாதிக்க முடிவு செய்திருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். ஆனால் கடைசியில் இந்த முடிவு கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன. கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கி உள்ளது.
( எல்லாமே நாடகம்.. சந்தர்ப்பம்! பாஜகவை அலறவிட்ட எடப்பாடி.. தூக்கி எறிஞ்சிட்டாராமே.. மொத்தமா கேம் ஓவர்)
திமுக திட்டம் என்ன?: லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம். அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8 தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 1 இடங்கள் மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர்களுக்கு தலா 2 தொகுதிகள் வழங்கப்பட்டன. இந்த முறை 2 இடங்கள் வழங்கப்படாது. மாறாக ஒரே ஒரு தொகுதி மட்டுமே வழங்கப்படும். காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் ராஜ்ய சபா இடங்களில் ஒன்று வழங்கப்படும். மற்றபடி 25 - 30 இடங்களில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கூட்டம் ஆலோசனை: இப்படிப்பட்ட நிலையில்தான் கனிமொழி நடத்திய திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டிற்கு வந்திருந்த சோனியாவை சந்தித்து சீட் ஷேரிங் பற்றி விவாதிக்க முடிவு செய்திருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.
சோனியாவும் பிரியங்காவும் தங்கியிருந்த கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் இந்த சந்திப்பு நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சந்திப்பை தவிர்த்தார் ஸ்டாலின். காரணம், சோனியாவிடம் நேரடியாக ஒரு எண்ணிக்கையை ஸ்டாலின் சொல்ல, அதற்கு சோனியாவை ஒரு எண்ணிக்கையை சொன்னால் அதனை புறக்கணிக்க ஸ்டாலினால் முடியாது என யோசித்தே சந்திப்பை கடைசி நேரத்தில் அவர் தவிர்த்ததாகச் சொல்லப்படுகிறது.

அதனால், கனிமொழியை வைத்தே இதனை டீல் செய்யலாம் என்றும், சோனியாவின் எண்ணத்தை அறிந்து கொண்டு அதன் பிறகு எப்படி அணுகலாம் என்றும் யோசித்துத்தான் தவிர்த்தார் என்று மற்றொரு தகவலும் திமுக தரப்பில் இருந்து கிடைக்கிறது. இந்த நிலையில், சோனியாவையும் பிரியங்காவையும் சந்தித்தார் கனிமொழி. அந்த சந்திப்பில், ஸ்டாலின் சொல்லியனுப்பிய சீட் ஷேரிங் விசயத்தை சோனியாவிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
குறிப்பாக, இந்த முறை 30 இடங்களில் திமுக போட்டியிட நினைக்கிறது. அதனால் காங்கிரஸ் 5 சீட்டுகளுக்கு ( அதிகபட்சம் 6 சீட்டுகள் ஒதுக்க ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். எடுத்தவுடனேயே 6 என்று சொல்ல வேண்டாம். 5-ல் ஆரம்பித்து 6-ல் முடிக்கலாம் என்பது ஸ்டாலினின் திட்டம்) ஒத்துழைக்க வேண்டும் என்று கனிமொழி சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு சோனியா இறுக்கமாகி விட்டாராம். கடந்த முறை 10 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த முறை 12 சீட்டினை எதிர்பார்க்கிறோம் என்று சோனியா சொல்ல, அதன்பிறகு கனிமொழியால் விவாதிக்கமுடியவில்லையாம். இதனை ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளார் கனிமொழி.












Click it and Unblock the Notifications