Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாமே நாடகம்.. சந்தர்ப்பம்! பாஜகவை அலறவிட்ட எடப்பாடி.. தூக்கி எறிஞ்சிட்டாராமே.. மொத்தமா கேம் ஓவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி இப்போது சந்தர்ப்ப வாதி என்பதை நிரூபித்து உள்ளார். இரட்டை தலைமை ஒற்றை தலைமை ஆகும் வரை காத்திருந்தார். இப்போத அவர் நிறம் மாறிவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

அதிமுக - பாஜக மோதல் இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. ஆனாலும் இவர்கள் மோதலில் ஒரு சிறிய வெளிச்சம்.. சின்ன மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு என்னுடைய முடிவு அல்ல. அது தொண்டர்களின் முடிவு .

தொண்டர்கள் எடுத்த முடிவு இது. அவர்கள் சொன்னதை கேட்டு.. அவர்களின் பேச்சுக்கு மதிப்பளித்து கூட்டணியை முறித்து உள்ளோம். இஸ்லாமியர்களே நீங்கள் எதிர்பார்த்தது போல கூட்டணியை முறித்து இருக்கிறோம். இனி பாஜகவுடன் கூட்டணி இல்லை. 2024 லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி இல்லை. 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. இனி கூட்டணி வைக்கவே மாட்டோம். அதிமுக தனியாக கூட்டணி அமைக்கும்., என்று கூறியுள்ளார்.

BJP is shocked because of the decision of Edappadi Palanisamy on AIADMK alliance

பேட்டி: இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைப்பாடு தொடர்பாக, மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், எடப்பாடி பழனிசாமி இப்போது சந்தர்ப்ப வாதி என்பதை நிரூபித்து உள்ளார். இரட்டை தலைமை ஒற்றை தலைமை ஆகும் வரை காத்திருந்தார். அதுவரை இஸ்லாமியர்கள் தொடர்பான மசோதாக்களில் பாஜகவிற்கு ஆதரவாக இருந்தார். இப்போது பாஜகவை தூக்கி ஏறிந்துவிட்டார். அதோடு இஸ்லாமியர்கள் மீது ஏதோ ஆர்வம் இருப்பது போல அக்கறை இருப்பது போல காட்டிக்கொள்கிறார். இதெல்லாம் சந்தர்ப்ப வாதம். நடிப்பு. அப்போது சசிகலாவை ஏமாற்றினார்.

( நச்சுன்னு பிளான்.. குட்டையை குழப்பிய எடப்பாடி.. திமுகவை திக்கி திணற வைக்க போகிறார்.. கசிந்த ரகசியம்?)

யாரை எல்லாம் பிடிக்க வேண்டுமோ பிடித்து பாஜக தயவில் மேலே வந்தார். இப்போ பாருங்க அவர்களை தூக்கி ஏறிந்துவிட்டார். பாஜகவுடன் இருந்த போது இஸ்லாமியர்கள் பற்றி பேசினாரா? இஸ்லாமிய கைதிகள் பற்றி பேசினாரா? ஏதாவது போராட்டம் செய்தாரா? ஏதாவது கோரிக்கைகளை வைத்தாரா? இந்த 6 மாத இடைக்காலத்தில் இஸ்லாமியர்களை ஏமாற்ற அவர் ஏதாவது பேசிக்கொண்டு இருக்கிறார். இதை எல்லாம் இஸ்லாமியர்கள் நம்ப மாட்டார்கள். எடப்பாடி டிராமா போடும் காலம் இது. கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமியர்களை இழுக்க பார்க்கிறார்.

என்ன சொன்னார்?: எடப்பாடி நாளை பாஜகவுடன் சேருவார் என்ற சந்தேகம் உள்ளது. எடப்பாடி வெளியே வர காரணம் தெரியவில்லை. அவர் இஸ்லாமியர்களை ஆதரிப்பது எல்லாம் சுத்த நாடகம். திமுக கூட்டணியில் குட்டையை குழப்ப இப்படி எடப்பாடி பழனிசாமி செய்கிறார். இப்படி பேசி திமுக கூட்டணி கட்சிகளை குழப்பி.. திமுகவிடம் கூடுதல் இடங்களை பெற வைக்க அதிமுக நடத்தும் நாடகம் இது. அப்படி இருக்க இஸ்லாமியர்கள் எப்படி நம்புவார்கள். இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வத்தை பாஜக நம்பவில்லை. ஓ பன்னீர்செல்வம் என்ன அரசியல் செய்ய போகிறார் என்ற திட்டமே இல்லாமல் இருக்கிறார்.

BJP is shocked because of the decision of Edappadi Palanisamy on AIADMK alliance

அவருக்கு மக்கள் மத்தியில் ஆர்வமே இல்லை. பாஜக ஒரு சீட்டு கொடுக்குமா.. இரண்டு சீட்டு கொடுக்குமா என்ற திட்டத்தில் இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். அப்படி திட்டமிடும் ஓ பன்னீர்செல்வம் எப்படி அதிமுகவை கைப்பற்ற முடியும். பாஜகவில் இணைந்தால் அரசியல் சுகமாக இருக்கும். ஒன்று இரண்டு சீட்டு கிடைக்கும் என்று ஓ பன்னீர்செல்வம் நினைக்கிறார். இது சுகமாக இருக்கும். பாதுகாப்பாக இருக்கும். ஆனால் அவருக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது. நானா எடப்படியா என்று அவர் பார்க்க வேண்டும். மக்கள் மன்றத்தில் இருக்க வேண்டும்.

தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டும். மக்களிடம் செல்ல வேண்டும். அவர் அதிமுகவில் தான் யார் என்பதை நிரூபிக்க வேண்டும். முறையாக திட்டமிட்டு பணிகளை செய்ய வேண்டும். அவர் தேர்தலில் தனியாக நின்று நிரூபித்து காட்ட வேண்டும். அல்லது டிடிவி தினகரன் உடன் நின்று அதிமுகவை எதிர்க்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே அதிமுகவிடம் தனது பலத்தை அவர் நிரூபிக்க முடியும். மக்களிடம் அவர் தான் யார் என்பதை காட்ட முடியும். ஆனால் அதை விட்டுட்டு பாஜக ஒரு சீட்டு கொடுக்குமா.. இரண்டு சீட்டு கொடுக்குமா என்ற திட்டத்தில் இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். அப்படி திட்டமிடும் ஓ பன்னீர்செல்வம் எப்படி அதிமுகவை கைப்பற்ற முடியும், என்று மூத்த பத்திரிகையாளர் பிரியன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+