Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் போட்ட கையெழுத்து.. வீடு தேடி வரும் பணம்.. மகளிர் உரிமைத்தொகையை விடுங்க.. அடுத்த சர்ப்ரைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்னொரு முக்கியமான உதவித்தொகை தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கிவிட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. வந்த உடனே இந்த திட்டத்தை நிறைவேற்ற நிறைய சிக்கல் இருந்தது. முதல் சிக்கல் தமிழ்நாட்டின் நிதி நெருக்கடி. போதிய நிதி இல்லாத காரணத்தால் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போனது.இந்த நிலையில் நிதி நிலைமை ஓரளவிற்கு சீரானது. இதையடுத்து திட்டத்தை தொடங்குவதாக முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 27.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத்தொகை குறிந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத்தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது ஆகும் இந்த திட்டம்.

Apart from Kalaingar 1000 RS Housewives money, Now sports persons will also get scholarship

புதிய திட்டம்: இந்த திட்டத்தின் இரண்டு மாத தவணை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது., தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்னொரு முக்கியமான உதவித்தொகை தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

விளையாட்டு: அதன்படி தமிழ்நாட்டை சார்ந்த விளையாட்டு வீரர் / வீராங்கனைகள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் நல உதவிகள் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டினை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் விளையாட்டு வசதிகளை ஏற்படுத்தவும், தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விளையாட்டு சூழலை உருவாக்கிடவும் தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

தேசிய, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், உரிய பயிற்சிகள் பெறவும் மற்றும் போட்டிகளில் பங்கேற்றிட தேவையான விளையாட்டு உபகரணங்கள் வாங்கிடவும் போதிய நிதிவசதி இல்லாத விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு தேவையான நல உதவிகள் வழங்கிடும் வகையில் "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை" (Tamil Nadu Champions Foundation) உருவாக்கப்பட்டு 08.05.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்கப்பட்டது.

Apart from Kalaingar 1000 RS Housewives money, Now sports persons will also get scholarship

விளையாட்டுத் துறை சிறப்பாக இயங்கிட நிதி ஆதாரம் என்பது மிக அவசியமான ஒன்றாகும். விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் "தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை" (Tamil Nadu Champions Foundation) தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த அறக்கட்டளையானது வருமானவரிச் சட்டம் 1961 ன் பிரிவு 12 AA மற்றும் 80G யின் கீழ் வரிவிலக்கு சான்று பெற்றுள்ளது. இந்த அறக்கட்டளையின் நிர்வாக நடைமுறைகளை சிறப்பாக செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசால் முதற்கட்டமாக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

( ஒரு காலத்தில் குப்பையா இருந்த இடம்.. வடசென்னை அடையாளமே தெரியாது மாறிடுச்சே.. அரசின் செம ஆக்சன்!)

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கியுள்ளார்கள். பல்வேறு பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிதியிலிருந்து தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் உதவித் தொகையாக ரூ.3,96,48,649/- (ரூபாய் மூன்று கோடியே தொண்ணூற்று ஆறு இலட்சத்து நாற்பத்து எட்டு ஆயிரத்து அறுநூற்று நாற்பத்து ஒன்பது மட்டும்) வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+