ஒரு காலத்தில் குப்பையா இருந்த இடம்.. வடசென்னை அடையாளமே தெரியாது மாறிடுச்சே.. அரசின் செம ஆக்சன்!
சென்னை: வடசென்னையில் ஒரு காலத்தில் மிகப்பெரிய அளவில் குப்பையாக.. காலி மதுபாட்டில்களோடு இருந்த இடம் ஒன்று இப்போது கண்கவர் பூங்காவாக மாற்றப்பட்டு உள்ளது.
வடசென்னையில் உள்ள மின்ட் மேம்பாலம் தற்போது பசுமையான இடமாக மாறியுள்ளது. இளைஞர்களுக்கான ஒரு "ஹேங்கவுட்" இடமாகவும் மாறிவிட்டது. ஒரு காலத்தில் இங்கே உள்ளே செல்ல முடியாத அளவிற்கு குப்பைகள் இருக்கும்.
மாற்றம் வந்தது: அதேபோல் எல்லா பக்கமும் மதுபாட்டில்கள் சிதறி கிடக்கும். மிக மோசமான நிலையில் இருந்தது இந்த பகுதி. 3.7 ஏக்கர் நிலப்பரப்பில், அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதியில்தான் மின்ட் பாலத்தில் இந்த இடம் உள்ளது. இங்கே தற்போது செய்யப்பட்ட சுத்திகரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த இடமே அடையாளம் தெரியாமல் மாறி உள்ளது.
இப்போது மியாவாக்கி காடு, மின்-நீரூற்று, பசுமையான நடைபாதை, கூழாங்கல் நடை பாதை, விளையாடும் பகுதி மற்றும் மூலிகை தோட்டம் உள்ளது. 4.5 கோடி செலவில் மாற்றப்பட்டுள்ள இந்த வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்கிறார்.

வடசென்னையில் பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகள் குறைவு. எனவே, ஒரு காலத்தில் குப்பை கொட்டும் இடமாக இருந்த இப்பகுதியை கண்டறிந்து, அதை மாற்ற முடிவு செய்தோம். இது அப்பகுதி மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்தைப் பற்றிய நல்ல உணர்வையும், ஹேங்கவுட் செய்வதற்கான இடத்தையும் கொடுக்கும், என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
( ஈசிஆர் அடியோடு மாறுது.. ரூ.25 கோடியில் வருது பிரம்மாண்ட வசதி.. குஷியில் இளசுகள்.. என்னன்னு பாருங்க)
வடசென்னை வளர்ச்சி: சென்னையில் தென்சென்னை தொடர்ந்து வளர்ந்து வந்தாலும் இன்னும் வடசென்னை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இந்த நிலையில்தான் வடசென்னையின் வளர்ச்சியை குறி வைத்து தமிழ்நாடு அரசு முக்கியமான "பிக் ப்ராஜெக்ட்" திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
அதன்படி வடசென்னை வளர்ச்சியை மையப்படுத்தி, அங்கே உள்ள குறைகளை போக்க, 1,000 கோடி ரூபாய் செலவில், 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வடசென்னையை மொத்தமாக உருமாற்றம் விதமாக இந்த பணிகள் தொடங்க உள்ளன. அங்கே அடிப்படை வசதிகள் தொடங்கி அல்டிமேட் வசதிகள் வரை பலவற்றை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மக்கள் குஷி: அதன் ஒரு கட்டமாகவே வடசென்னையில் ஒரு காலத்தில் மிகப்பெரிய அளவில் குப்பையாக.. காலி மதுபாட்டில்களோடு இருந்த இந்த இடம் தற்போது மாற்றப்பட்டு உள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த பகுதி திறந்து விடப்படும். மக்கள் இடையே இந்த புதிய பார்க் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

தென்சென்னை அளவிற்கு அல்லது தென்சென்னையை விட சிறப்பாக சென்னையை வளர்க்கும் முடிவில் இந்த 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) சார்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இந்த பணிகள் நடக்க உள்ளன. இதன் ஒரு கட்டமாக வுமன் கிர்ஸ்டியன் கல்லூரி மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்கள் வடசென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications