அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குட்நியூஸ் வருது.. கரண்ட் பில் குறையுதா? எவ்ளோன்னு பாருங்க.. சூப்பர்
சென்னை: தாறுமாறாக உயர்த்தப்பட்ட கரண்ட் பில்லில் மாற்றம் வர உள்ளதாக தெரிகிறது.. குறிப்பாக, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, முக்கிய சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில், லிப்ட், மோட்டார் பம்ப் போன்றவற்றை உள்ளடக்கிய, "காமன் சர்வீஸ்" எனப்படும் பொது சேவை மின் இணைப்பு இருந்தது... இதற்கு, வீட்டு பிரிவில் மின் கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

அதாவது, பொதுவான பயன்பாட்டிற்கு பலர் தனி மின் மீட்டரை பயன்படுத்தி வந்த நிலையில், வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் மோட்டார், பொதுவான மின் விளக்கிற்கு தனியாக கட்டணம் வசூலிக்க தனி மீட்டர் பயன்படுத்தி வந்தனர்.. இதனால், 100 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 500 யூனிட் வரை மானிய கட்டண சலுகையும் கிடைத்தன.
தொழிற்சாலைகள்: ஆனால், கடந்த, 2022 செப்டம்பரில் இந்த மின் கட்டணத்தை, வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியது.
அதன்படி, முதல்முறையாக, அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது சேவை பிரிவுக்கு, மின் கட்டணம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு, ஒரு யூனிட், 8 ரூபாயும், மாதம் நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு, 100 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், கண்காணிப்பு கேமரா, சமூக கூடம் ஆகியவற்றிற்கு பொருந்தும்.
குடியிருப்புவாசிகள்: சொந்த குடியிருப்புகள், தனி வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பொதுவான பயன்பாட்டிற்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.. குடியிருப்புகளுக்கு வணிக ரீதியிலான கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல என்ற ஆதங்கமும், அதிருப்தியும் குவிந்தன.. ஆனால் அதற்குள், கடந்த ஜூலையில் மறுபடியும் கரண்ட் பில் உயர்த்தப்பட்டுவிட்டது.
அதன்படி, மறுபடியும் பொது சேவை பிரிவுக்கான ஒரு யூனிட் கட்டணம், 8.15 ரூபாயாகவும், நிரந்தர கட்டணம் கிலோ வாட்டிற்கு, 102 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டன. இதனால், குறைந்த வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.. இந்த கட்டணத்தை குறைக்குமாறு, கோரிக்கை விடுத்தபடியே உள்ளனர்..
குறையும் கரண்ட் பில்: இந்த கோரிக்கையைதான் தமிழக மின்துறை பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. 10க்கும் குறைவான வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, பொது சேவை மின் கட்டணத்திற்கு பதில், வீட்டு பிரிவிலேயே மின் கட்டணத்தை நிர்ணயிக்க, அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இதுதொடர்பாக, மின் வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் ஆலோசித்து, விரைவில் அந்த அறிவிப்பினை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications