சந்திரபாபு நாயுடு மாதிரி.. ஆட்சியை கவிழ்க்க ஆதவ் ப்ளான்.. கூடவே கூட்டி போகும் விஜய்! அப்பாவு அட்டாக்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் முதன்முறையாக வெளிநாட்டு அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். முதல்வரின் இந்த பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அவர் புறப்படுவதற்கு சற்று முன் தான் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா முதல்வராகி கூடாது என்ற பயத்தில் தான் அவரை லண்டன் அழைத்துச் செல்கிறாரா? சி.எம். விஜய் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் சபாநாயகர் அப்பாவு.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்," தவெக ஆட்சி அமைந்த 100 நாட்களுக்குள் மக்களின் கோபம், இளைஞர்களின் அதிருப்தி, பெண்களின் சாபம், விவசாயிகளின் கண்ணீர், அரசு ஊழியர்களின் ஆவேசம் ஆகியவற்றால் செல்வாக்கு சரிந்து வருவதை உணர்ந்து இடைத்தேர்தலில் பழைய பருப்பு வேகாது என்பதற்காக உங்களால் "#கல்லாப்பெட்டிகூட்டணி " என்று வர்ணிக்கப்பட்ட கட்சிகளை அழைத்து "மதச்சார்பற்ற சமூகநீதி #வெற்றிக்கூட்டணி " என்று பெயர் மாற்றம் செய்ததாலேயே மக்களின் செல்வாக்கை பெற்றுவிடலாம் என்று கனவு காணாதீர்கள் CM sir ?
நேற்று தங்கள் தலைமையில் நடைபெற்ற #கூட்டணிகட்சிகளின் கூட்டம் முடிந்த பின்பு கூட்டத்தின் நோக்கம் குறித்தோ, பிரதமர் வேட்பாளர் குறித்தோ, இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்தோ பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேச துணிவில்லாமல், கூட்டணி கட்சித்தலைவர்கள் தங்கள் விருப்பப்படி கருத்து சொல்லிக் கொள்ளுங்கள் என்று அவர்களை அவமதித்திருப்பது, உங்கள் "#நரித்தனத்தின் வெளிப்பாடு" என்பது நாட்டுமக்களுக்கு நன்றாக தெரியும் CM sir ?
இந்தியாவில் அரசியல் அமைப்புச் சட்டம், பத்திரிகை சுதந்திரம், கருத்து சுதந்திரம் மக்களின் உரிமைகளுக்கு எதிராக அன்னை #இந்திரா அவர்களால் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையை அன்றைய முதல்வர் #கலைஞர் அவர்கள் எதிர்த்து குரல் கொடுத்ததால் முன்னாள் முதல்வர் #முகஸ்டாலின் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை அனுபவித்த தியாக வரலாற்றை #சட்டமன்றத்தில் கேலி செய்து கூத்தடிக்கும் பண்பில்லா, அறிவில்லா, நாகரிகமில்லா, #கூத்தாடிக்கு முதல்வர் பதவி ஒரு கேடா ?
ஒருமுறை ஆந்திர முன்னாள் முதல்வர் மறைந்த என்.டி.#இராமராவ் அவர்கள் வெளிநாடு பயணம் சென்று திரும்புவதற்குள் #சந்திரபாபுநாயுடு அவர்கள் ஆட்சியை கவிழ்த்து முதல்வரானது போல் #ஆதவ்அர்ஜூனா முதல்வராகிவிடக் கூடாது என்ற பயத்தில் உங்களோடு #லண்டன் அழைத்து செல்கிறீர்களா #CMsir ?" என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
