ராகுல், விஜய்யை தூண்டிவிட்டு பின்னால் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன? அப்பாவு கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுவரையறை என்ற தேசிய பிரச்சினையை இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைத்து பேசி முடிவெடுக்க முடியாத மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில் எதிர்கருத்து தெரிவித்த விஜய்யை தூண்டிவிட்டு பின்னால் ஒளிந்து நின்று வேடிக்கை பார்ப்பதன் மர்மம் என்ன? என திமுக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: தவெக ஆட்சி ஆரம்பித்த‌‌ நாள் முதல் அரசு தலைமை செயலகத்தை அமைச்சர்கள் மக்கள் பணிக்கு பயன்படுத்தாமல் த.வெ.க கட்சி அலுவலகமாக பயன்படுத்தி வருவதோடு , தற்போது தமிழக தலைமைச் செயலாளரையும் தவெக தலைமைச் செய்தி தொடர்பாளராகவே மாற்றியிருப்பது கண்டிக்கத்தக்கது! நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது!

joseph vijay appavu rahul gandhi

நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை மசோதா குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசிக்க இருப்பதால், தமிழக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்த தலைமை செயலாளர், தற்போது ஒன்றிய அரசு கொண்டு வர இருக்கின்ற #FCRA மசோதா குறித்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தமிழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுப்பாரா CM sir?

நாடாளுமன்ற தொகுதி மறு வரையறை குறித்து ஏற்கனவே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 5 மாநில முதலமைச்சர்கள் மற்றும் தென் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக "இது ஒன்றும் அப்படி பெரிய #பிரச்சினை அல்ல"-என்று தேர்தலின் போது தெரிவித்த விஜய், தற்போது ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸின் வஞ்சக வலையில் சிக்கி இந்த கூட்டத்தை நடத்தியது உங்களுக்கு வெட்கமாக இல்லையா CM sir?

தொகுதி மறு வரையறை என்ற தேசிய பிரச்சினையை இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைத்து பேசி முடிவெடுக்க முடியாத நாடாளுமன்ற எதிர்கட்சித் தலைவர் #ராகுல்காந்தி , தமிழக சட்டசபைத் தேர்தல் நேரத்தில் எதிர் கருத்து தெரிவித்த விஜய்யை தூண்டிவிட்டு பின்னால் ஒளிந்து நின்று வேடிக்கை பார்ப்பதன் மர்மம் என்ன?

தொடர்ந்து காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை பாஜக தொடர்வதும், தமிழகத்திற்கு காவிரி தண்ணீரைத் தர கூடாது என்பதில் காங்கிரசும் - பாஜகவும் ஓரணியில் நிற்பதும் அவர்கள் இருவருக்கும் துணை நிற்கும் நீங்களும் தமிழக மக்களுக்கு செய்யும் எட்டப்பர் வேலை என்பது மக்களுக்கு தெரியாததா CM sir? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய் அனைத்து கட்சி எம்பி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்திற்கு திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்ல், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+