ஐபோன் உலகில் புதிய புரட்சி.. ஆப்பிள் வெளியிட்ட iOS 26 அப்டேட்.. அது என்னங்க Liquid Glass?
சென்னை: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நேற்று இரவு நடைபெற்ற WWDC மாநாட்டில், ஆப்பிள் நிறுவனம் iOS 26 ஐ அறிமுகப்படுத்தியது. இது 2013 இல் வெளியான iOS 7 க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான மறுவடிவமைப்பு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது கடந்த 12 வருடங்களில் மிகப்பெரிய அளவிற்கு செய்யப்பட்ட அப்டேட் இது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

திரவ கண்ணாடி வடிவமைப்பு
புதிய iOS 26 ஆனது, திரவ கண்ணாடி (Liquid Glass) எனும் புதிய வசதியுடன் வருகிறது. இது ஒளி ஊடுருவக்கூடிய, கண்ணாடி போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. இந்த வடிவமைப்பு, பயனாளியின் சுற்றுப்புறத்திற்கு ஏற்ப பிரதிபலிக்கும் மற்றும் மாற்றியமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. செயலிகள், விட்ஜெட்கள், நோட்டிபிகேஷன், முகப்பு ஸ்கிரீன் மற்றும் லாக் ஸ்கிரீன் என அனைத்தும் மினுமினுக்கும் மற்றும் மாறும் தன்மையுடன் இருக்கும்.
திரவ கண்ணாடி காட்சி மேம்பாடுகள்:
லாக் ஸ்கிரீனில் உள்ள நேரம், இமேஜ், வால்பேப்பர்களுக்கு ஏற்றவாறு திரவமாக மறுஅளவிடப்பட்டு மாற்றியமைக்கப்படும். அதாவது உங்கள் வால் பேப்பர் கண்ணாடி போல மாறும். பார்க்க கண்ணாடி போலவே இருக்கும். பயன்படுத்தவும் கண்ணாடி போலவே இருக்கும்.
செயலிகள் ஐகான்கள் மற்றும் விட்ஜெட்கள் தெளிவான கண்ணாடி போல மாறும். பார்க்கும் எல்லாமே கண்ணாடி போல மினுமினுக்கும் திறன் கொண்டதாக இருக்கும். ஆப்பிள் வெளியிட்டதிலேயே மிகப்பெரிய அப்டேட் இது என்று கூறப்படுகிறது. அதோடு ios அப்டேட் பெயரை வருத்தத்தோடு சேர்த்து ios 26 என்று வெளியிட்டு வருகின்றனர்.
இந்த புதிய வடிவமைப்பு ஐபோன்கள், ஐபேட்கள், மேக்ஸ், ஆப்பிள் வாட்ச், ஆப்பிள் டிவி மற்றும் விஷன்ஓஎஸ் சிஸ்டம்ஸ் போன்ற அனைத்து ஆப்பிள் சாதனங்களிலும் கிடைக்கும்.
ஆப்பிள் ஏஐ அம்சங்கள்
காட்சி ஏஐ: ஸ்கிரீன்ஷாட் எடுக்கும்போது, திரையில் உள்ள பொருட்களை அடையாளம் காணும் வசதி உள்ளது. இதன் மூலம், பொருட்கள் வாங்குவதற்கான லிங்குகளை தருவது, காலண்டரில் சேர்ப்பது அல்லது AI கேள்விகளைக் கேட்பது போன்ற செயல்களைச் செய்ய முடியும்.
நேரடி மொழிபெயர்ப்பு: அழைப்புகள், ஃபேஸ் டைம் அல்லது குறுஞ்செய்திகளை உடனடியாக மொழிபெயர்க்கலாம். அதுவும், எந்தத் தரவையும் போனுக்கு வெளியே அனுப்பாமலேயே இந்த வசதியைப் பயன்படுத்தலாம். அதாவது உடனுக்கூடன் ஏஐ டிரான்ஸ்லேஷன் செய்ய முடியும்.
ஜென்மோஜி & இமேஜ் பிளேகிரவுண்ட்: எமோஜிக்களை இணைக்கலாம் அல்லது AI கருவிகளைப் பயன்படுத்தி மெசேஜ்களில் ஜென்மோஜி & இமேஜ் பிளேகிரவுண்ட் உருவாக்கலாம்.
மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முக்கிய செயலிகள்
ஆப்பிளின் செயலிகள் அனைத்தும் மொத்தமாக அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. புதிய கிளாஸ் ஸ்கிரீனுக்கு ஏற்ப செயலிகள் மாற்றப்பட்டு உள்ளது. அதில் ஏஐ இணைக்கப்பட்டு உள்ளது.
கேமரா & புகைப்படங்கள்: புகைப்படம் மற்றும் வீடியோவுக்கான இரண்டு-வரிசை UI, புதிய புகைப்பட கேலரி ("Library" vs "Collections") போன்ற வசதிகள் மாற்றப்பட்டு உள்ளன.
இது போக மேப்ஸ் , சபாரி என்று எல்லா செயலிகளும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது 2013 இல் வெளியான iOS 7 க்குப் பிறகு மேற்கொள்ளப்படும் மிக முக்கியமான மறுவடிவமைப்பு என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications