மாணவர்கள் கவனத்திற்கு.. இலவச கல்வி திட்டம்.. பட்டப்படிப்பை கட்டணமின்றி படிக்க வேண்டுமா? முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2 வாரங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இணைவதற்கான பணிகளை தொடங்கி இருக்கின்றனர். இந்த சூழலில் சென்னை பல்கலைக்கழகம் சார்பாக ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்திற்கான விண்ணங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 18 அரசுக் கல்லூரிகள், 24 அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகள் மற்றும் 89 சுயநிதி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில்ம் இளநிலைப் படிப்புகளில் சென்னை பல்கலைக்கழக இலவச கல்வி திட்டத்தின் கீழ் இளங்கலை பட்டப்படிப்பு சேர்க்கை நடைபெறுகிறது.

இலவச கல்வி திட்டம்
இதன் மூலமாக ஒவ்வொரு கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 3 இலவச இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இவை பல்கலைக்கழகத்தால் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை மேல், கூடுதல் இடங்களாக அனுமதிக்கப்படும். இந்த திட்டத்தில் சேர்வதற்கு 2024-25 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்வு பெற்றிருக்க வேண்டும். அதேபோல் அனைத்து பாடங்களிலும் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம்
முக்கியமாக குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மேல் இருக்க கூடாது. இதனால் விண்ணப்பத்துடன் வருமான சான்றிதழை வருவாய் துணை வட்டாட்சியரிடம் பெற்று அனுப்ப வேண்டும். இந்த திட்டத்தில் பெற்றோரை இழந்த மற்றும் ஆதவற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அவர்களிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே கட் ஆஃப் பார்க்கப்பட்டு முன்னுரிமை வழங்கப்படும்.
முதல் பட்டதாரி
அதேபோல் முதல் பட்டதாரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்தக் கட்டமாக முன்னுரிமை அளிக்கப்படும். தொடர்ந்து முக்கிய பாடங்களில் 80 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் 1:2 என்ற விகிதத்தில் மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
இலவச கல்வித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://www.unom.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்திற்கான கடைசி தேதியாக மே 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்துடன் இணைந்து 11 மற்றும் 12 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ, முதல் பட்டதாரி சான்றிதழ், வருவாய் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் மற்றும் பெற்றோர் இல்லையென்றால் அவர்களின் இறப்பு சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications