அடேங்கப்பா.. எவ்வளவு தலைகள்.. கலகலப்பை ஏற்படுத்திய பாஜக பேனர்!
விருது பெற்ற தமிழிசைக்கு கோவை பாஜக சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது.
சென்னை: கோவையில் வைக்கப்பட்டுள்ள பாஜக பேனரைதான் எல்லோரும் பார்த்து கொண்டே செல்கிறார்கள்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு சமீபத்தில் அமெரிக்காவின் இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம் என்ற விருது வழங்கப்பட்டது. இதற்காக பாஜக சார்பில் தமிழிசைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அதன்படி கோவை மாவட்ட பாஜக சார்பில் தமிழிசைக்கு பாராட்டு விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 12ம் தேதி அதாவது நாளை மறுநாள்தான் இந்த பாராட்டு விழா நடத்த போகிறார்கள். இதற்காக விளம்பர பலகை தயார் ஆகி உள்ளது.

பாஜக தலைகள்
இந்த பேனர் விளம்பரம் இணையத்திலும் வைரலாகி வருகிறது. காரணம், பேனர் முழுக்க பாஜக தலைகள்தான். விழாவின் நாயகி தமிழிசையின் பெயருக்கே அங்கே இத்துனூண்டு இடம்தான் இருந்தது.

மோடி படம்
கோவையில் உள்ள எல்லா பாஜக பிரமுகர்களும் அந்த பேனரில் இருப்பார்கள் போல. பேனர் முழுக்க ஆட்கள் வழிந்து நிறைகிறார்கள். அதில் இருக்கிறதுலயே பெரிய தலையாக தமிழிசையின் படம் உள்ளது. இதற்கு அடுத்தாற்போல்தான் பிரதமர் மோடி படமே இருக்கிறது. மத்திய கயிறு வாரியத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் படமும் உத்து பார்த்தால் தெரிகிறது.

வைரல் விளம்பரம்
ஆனால் வானதி சீனிவாசன் படம் மிஸ்ஸிங்!! இவ்வளவு ஆட்கள் நிறைந்திருந்தாலும் ஒரு ஓரத்தில் தாமரையும் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அந்த விளம்பரத்திற்கு இணையத்தில் கமெண்ட்கள் ஏராளமாக குவிந்து வருகிறது.
|
புறா கூண்டுல
"புறா கூண்டுல பார்ட்னர்ஷிப் வேறயா?", "கட்சியில் இருக்கிற 20 பேர் படத்தையும் போட்டாச்சு", "கட்சியில இருக்கிற மொத்த பேரும் ஒரே பேனர்ல இருக்காங்க" என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications