Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆந்திரா டூ பல்லாவரம்.. தப்ப முயன்ற கஞ்சா கும்பல்.. சினிமா பாணியில் மடக்கிய இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 1.50 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்து, வடமாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் கும்பலை மடக்கிப் பிடித்த காவல் ஆய்வாளர் சரவணனைப் பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக கஞ்சா புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலீஸார் தொடர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையிலும் கஞ்சா விற்பனை குறைந்தபாடில்லை. இந்நிலையில், சென்னை பல்லாவரத்தை அடுத்த தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் பெரிய அளவில் கஞ்சா கடத்தப்பட்டு வருவதாக சங்கர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

appreciation-for-the-inspector-who-seized-high-grade-ganja-worth-rs-1-50-crores-smuggled-from-andhr

இதையடுத்து, ஆய்வாளர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனகாபுத்தூர் அருகே புறவழிச் சாலையில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்று அதிவேகமாக வந்துள்ளது. அந்த சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் சென்றுள்ளனர்.

இதையடுத்து, தனிப்படை போலீசார் அந்த சரக்கு வாகனத்தை விரட்டிச் சென்று பிடித்துள்ளனர். அப்போது, எதற்காக வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றீர்கள் என்று கேட்டபோது, வாகனத்தில் டீசல் குறைவாக இருந்ததாகவும், வண்டியை நிறுத்தினால் மீண்டும் ஸ்டார்ட் செய்ய முடியாததால் பெட்ரோல் பங்க்கை தேடி வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

சந்தேகமடைந்த போலீஸார் உடனடியாக வாகனத்தில் ஏறி சோதனை செய்தபோது பெட்ரோல் பாதிக்கும் மேல் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சரக்கு வாகனத்தின் உள்ளே ஏறி சோதனை செய்தபோது திராட்சை பழம் ஏற்றி வரும் பெட்டிகள் மட்டுமே இருந்துள்ளன. வேறு எந்தப் பொருளும் இல்லாமல் இருந்துள்ளது. அப்போது, லாரியின் மேற்பகுதிதியில் சில மூட்டைகள் கிடப்பது தெரியவந்துள்ளது.

லாரியின் மேற்பகுதியில் போலீஸார் ஏறி அந்த மூட்டைகளை சோதனை செய்தபோது உயர் ரக கஞ்சா இலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, ரூ. 1.50 கோடி மதிப்பிலான 300 கிலோ கஞ்சா மூட்டைகளைப் போலீஸார் பறிமுதல் செய்து, அவர்கள் இருவர் மீதும் போதை பொருள் கடத்தல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடத்தலில் ஈடுபட்டவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த தேஜஸ் பாபு வாக்மேரே (28), சாகர் சகாதேவ் (31) என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவர் மீதும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்கனவே 3 கஞ்சா கடத்தல் வழக்குகள் உள்ளன.

கஞ்சாவை யாரிடம் விற்பனை செய்வதற்காக சென்னைக்கு வந்தனர் என்பது குறித்து அவர்கள் இருவரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ரூ. 1.50 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தியவர்களை சாதுரியமாக செயல்பட்டு பிடித்த காவல் ஆய்வாளர் சரவணனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. காவல் துறை ஆணையர் அபின் தினேஷ் மோதக், காவல் ஆய்வாளர் சரவணனை சான்றிதழ் வழங்கிப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+