ஏ.ஆர்.ரகுமானுக்கு குறி?.. தனிமரமாக்க முயற்சி? பாவம் ரஹ்மான்.. ஓடிவந்த "தம்பிகள்".. தமிழக அரசு அதிரடி
சென்னை: ஏ.ஆர். ரஹ்மானை பொறுத்தவரை, இசையையும் தாண்டி, விமர்சனங்களில் அவ்வளவாக சிக்காதவர்.. மென்மையானவர்.. தன்னடக்கம் நிறைந்தவர்.. மதநல்லிணக்கத்தை வலியுறுத்துவர்.. எனினும், நேற்று நடந்த சம்பவத்தை மையமாக வைத்து, ரகுமானுக்கு எதிராக பல விமர்சனங்கள் முளைத்து கிளம்பி உள்ளன.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி கடந்த 10-ந்தேதி நடந்தது. மறக்குமா நெஞ்சம் என்ற இந்த இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் படையெடுத்து திரண்டு வந்தனர்.. ஆனால், வந்தவர்களுக்கு வேதனையும், குமுறலும், புலம்பலும், வெறுப்பும்தான் மிஞ்சியதாக சொல்லப்பட்டது..

டிக்கெட்கள்: டிக்கெட்டுகள் அதிகமாக விநியோகம் செயததால், 50 ஆயிரம் விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் சீட்டில், சாதாரண டிக்கெட் வாங்கியவர்கள் இருந்ததாகவும், ஏற்பாடுகள் சரியில்லை என்றும், தண்ணீர், கார் பார்க்கிங் எதுவுமே சரியில்லை என்றும் புலம்பல்கள் வெடித்தன.
25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதனால், ரசிகர்கள் பெரும் சிரமப்பட்டுள்ளனர்.. பலர் அரங்கைவிட்டு வெளியேறிஉள்ளனர். இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சி நடக்காமலேயே இருந்திருக்கலாம், இந்த நிகழ்ச்சி "மிகப்பெரிய ஸ்கேம்" என்ற சர்ச்சையான கருத்துகளை சோஷியல் மீடியாவில் ஆக்கிரமித்தன..
டிக்கெட்டுகள்: கட்டுக்கடுங்காத கூட்டம் கட்டி ஏறியதால் ஏகப்பட்ட நெருக்கடி ஏற்பட்டு விட்டது.. பணம் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இஷ்டத்துக்கு டிக்கெட்டுகளை விற்றுத் தீர்த்திருக்கிறார்கள்... 25 ஆயிரம் பேர் கொள்ளளவு கொண்ட அந்த தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தில் 40,000-த்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்றிருக்கிறார்கள்.. இதனால்தான் கூட்டம் கட்டி ஏறியது.
எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு வழிகாட்டுதல், போலீஸ்பாதுகாப்பு, லைட் வசதிகள், வெளியேறும் வசதிகள் என எதையும் முறையாக ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை. கூட்ட நெரிசலில் சிக்கி வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் தவித்துள்ளனர்.. பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டிருக்கிறது.. இதனால் நிகழ்ச்சியை காணாமல் வெளியேறினால் போதும் என்கிற முடிவில் வெளியேற முயற்சித்தால் யாராலும் முடியவில்லை. இதனால் மக்களின் கோபமும் தாறுமாறாக வெடித்தது.

மாமல்லபுரம்: இந்த நிகழ்ச்சியால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏகத்துக்கும் ஏற்பட்டது. அதேசமயம், மாமல்லபுரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலினின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களோ, ரஹ்மானுக்கும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கும் எதிராக போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
சங்கர்: அதுமட்டுமல்ல, ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏன் போடப்படவில்லை என்று டிஜிபி சங்கர் ஜூவாலிடம் ஸ்டாலின் கடிந்து கொண்டாராம்.. அதனாலேயே நிகழ்ச்சியில் நடந்துள்ள குளறுபடிகள், பிரச்சனைகள் குறித்து விசாரித்து அறிக்கை தரச்சொல்லி தாம்பரம் போலீஸ் ஆணையர் அமல்ராஜுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.. இதனையடுத்து விசாரணை நடத்தி வருகிறார் போலீஸ் கமிஷ்னர். அந்தவகையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை அழைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் அறிக்கை ஒன்று, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. "ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துவது என்பது மிகவும் சிக்கலான ஒரு வேலை. அதில் கூட்டத்தக் கட்டுப்படுத்துவது, போக்குவரத்தை கையாள்வது என ஏராளமான விஷயங்கள் உள்ளன.
குளறுபடிகள்: ஒருங்கிணைப்பு குளறுபடிகள் காரணமாக, துரதிர்ஷ்டவசமான வகையில் அதிக கூட்ட நெரிசல் உள்ளிட்ட எதிர்பாராத பிரச்சினைகள் பெரிய இசை நிகழ்ச்சிகளின் போது நடக்கின்றன. நோக்கங்கள் நல்லதாக இருந்தாலும், சில விஷயங்கள் தவறாகி விடுகின்றன. நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள் இந்த சம்பவத்தைப் பற்றி சிந்திப்பது முக்கியம். கலைஞர்கள் என்ற முறையில், நாங்கள் இந்த தயாரிப்பாளர்கள் மீது நம்பிக்கை வைக்கிறோம்.
நாங்கள் மேடையில் இருக்கும்போது எங்கள் ரசிகர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய இந்த தயாரிப்பாளர்கள் மேல் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம். திட்டமிடல் மற்றும் பாதுகாப்பில் நான் உட்பட கலைஞர்கள் தீவிரமான பங்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.. அத்துடன், ரஹ்மானுக்கு தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறார்.

"இசை நிகழ்ச்சியின்போது நடந்தது தற்செயலானது. நான் ஏஆர்.ரகுமானுக்கு ஆதரவாக நிற்கிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பேற்பார்கள் என்று நம்புகிறேன். நம் அனைவர் மீதும் ஏஆர் ரகுமான் அன்பு செலுத்துவது போன்று ரசிகர்களும் வெறுப்பை தவிர்த்து அன்பை தேர்ந்தெடுங்கள்" என்று நடிகர் கார்த்தி ரஹ்மானுக்கு ஆதரவை நீட்டியுள்ளார்.
பிரதான பொறுப்பு: யுவன் சங்கர், கார்த்தியின் இந்த கருத்துக்களே பெரும்பாலானோரின் கருத்துக்களாகவும் இணையத்தில் கிளம்பி உள்ளது.. நடந்த சம்பவங்கள் அனைத்துமே உண்மை என்றாலும், இவைகளுக்கு ஏஆர் ரஹ்மான் மட்டுமே பொறுப்பேற்க முடியாது.. பிரதான பொறுப்பையும், ஏற்க வேண்டியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே..
இந்த ஒரு சம்பவத்தை மட்டுமே வைத்து, ரஹ்மானை குறி வைப்பதும், தனிநபர் வார்த்தை தாக்குதலை தொடுப்பதும் சரியல்ல என்ற கருத்துக்களும் வலுப்பெற்று வருகின்றன.
ரஹ்மான்: இன்னொன்றையும் இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. நடந்த சம்பவத்துக்கு இவர்கள்தான் காரணம் என்று யாரையும் ரஹ்மான் சுட்டிக்காட்டவில்லை.. தன்மீதான விமர்சனங்களுக்கு எந்த பதிலடியையும் தரவில்லை.. இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்தவிதமான சம்பந்தமில்லை என்றுகூறி, பிறர்மீது பழியை போட்டு ஒதுங்கி கொள்ளவும் இல்லை..
"நடந்த சம்பவம் அனைத்துக்குமே நான் பொறுப்பேற்கிறேன்" என்று துக்கம் நிறைந்த குரலில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.. பணத்தை திருப்பி தருவதாகவும் ரஹ்மான் சொல்லிவிட்டார்.. பலமுறை மன்னிப்பும் கேட்டுவிட்டார்.. அதற்காக, இந்த விஷயத்தில், சிலர் வேண்டுமென்றே மதத்தை திணித்து, வன்மத்தை கக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னந்தனி தனிமரமாய் ஏ.ஆர்.ரஹ்மானை தவிக்கவிட்டுவிடாமல், ஓடோடிவந்து ஆதரவு தந்து, அன்பு கரம் கோர்த்துள்ளனர் திரையுலக சகோதரர்கள்..!!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications