Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏஆர் ரகுமான் கச்சேரி குளறுபடி.. போக்குவரத்து நெரிசலில் சிக்கிய முதல்வர் வாகனம்.. போலீஸ் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏஆர் ரகுமான் இசைக்கச்சேரி நடந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் என்று காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலினின் வாகனம் நெரிசலில் சிக்கியதற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் எனவும் இது குறித்து விளக்கம் கேட்கப்படும் எனவும் தாம்பரம் காவல்துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு எந்த ஒரு சரியான ஏற்பாடுகள் செய்யவில்லை என்று விழாவுக்கு வந்த ரசிகர்கள் பலரும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மூச்சு விடக்கூட முடியவில்லை என்று கூறிய ரசிகர்கள் டிக்கெட்டுகளை கிழித்து வீசினர். இசைக்கச்சேரியை பார்க்காமலேயே கோபத்தோடு வீட்டிற்கு திரும்பி சென்றனர்.

AR Rahman concert: Chief Ministers vehicle stuck in traffic jam Tambaram Police explanation

நேற்றைய தினம் மாலையில் இருந்தே கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏஆர் ரகுமானின் இசைக்கச்சேரியை கேட்பதற்காக பல்லாயிரக்கணக்கானோனர் வாகனங்களில் குவிந்த காரணத்தால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

இந்த இசைக்கச்சேரியை Orchid Productions ப்ரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனமும், 5, AC Block 3rd St, Anna Nagar, Chennai, Tamil Nadu 600040 என்ற முகவரியில் இயங்கி கொண்டிருக்கும் ACTC Events என்ற நிறுவனமும் ஒருங்கிணைத்து நடத்தினர். பனையூரில் இருக்கக்கூடிய ஆதித்யா ராம் பேலஸில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஐந்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள் பலரும் வந்திருக்கின்றனர்.

அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகே உள்ள சாலை கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் அளவுக்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து தங்கள் வந்திருந்த கார்களை சாலையோரம் நிறுத்திவிட்டு ஐந்து கிலோ மீட்டர் வரை நடந்தே நிகழ்ச்சி நடக்கக்கூடிய இடத்திற்கு வந்திருக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் அங்கே கடுமையான கூட்ட நெரிசல் இருந்திருக்கிறது.

15000 பேர் மட்டுமே அமர்ந்து வேடிக்கை பார்க்கக்கூடிய ஒரு இட வசதியை வைத்துக்கொண்டு 50,000 மேற்பட்டோருக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது என்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பலரும் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.இந்த நிகழ்ச்சிக்கு குழந்தைகளை அழைத்து வந்த தாய்மார்கள் பலரும் கடுமையான கூட்டத்தில் சிக்கி அழுது இருக்கிறார்கள். ஒரு நூறு மீட்டர் இடைவெளியில் தன்னுடைய குழந்தைகளை பிரிந்த ஒரு தாய் அந்த குழந்தைகளிடம் நெருங்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல். உள்ளே சென்றால் மூச்சு கூட விட முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருக்கிறது.

இது திடீரென நடக்கும் ஒரு நிகழ்ச்சி கிடையாது. முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி. அப்படி இருக்கும் பொழுது சரியான முறையில் கார் பார்க்கிங் வசதி செய்து கொடுக்கவில்லை. பணத்தைப் பெற்றுக் கொண்டு சரியான இருக்கை வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை. உண்மையை சொல்லப்போனால் இது ஒரு மோசடி.

இந்த மோசடிக்கு இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனமும். ஏ ஆர் ரஹ்மானும் பதில் சொல்லியாக வேண்டும் என்று அழாத குறையாக சாலைகளில் கதறினர் ரசிகர்கள். மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு எங்களிடம் பணம் பெற்று இருக்கிறார்கள். டிக்கெட் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் உள்ளே அனுமதிக்கவில்லை. எங்களுக்கான இருக்கைகளில் எங்களுக்கு இருக்கை கொடுக்கப்படவில்லை. எனவே எங்களுடைய பணத்தை அவர்கள் திருப்பி தர வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்தனர்

கிழக்கு கடற்கரை சாலையில் கான்சர்டில் பங்கேற்க வந்தவர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் பல மணி நேரம் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலினின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனையடுத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பதறிப்போயினர்.

AR Rahman concert: Chief Ministers vehicle stuck in traffic jam Tambaram Police explanation

இந்நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளது. கான்சர்டை காண வந்த ரசிகர்களுக்கு இருக்கைகள் கிடைக்காமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்நிறுவனம் அதற்கான முழு பொறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் கான்சர்ட் நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம் என காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்யவில்லை என்றும், நிகழ்ச்சிக்கான தகுந்த ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் செய்யவில்லை என்றும் தாம்பரம் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

முதலமைச்சரின் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதற்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம், நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ளப்படும் என தாம்பரம் ஆணையரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+