மீண்டும் புயல்.. ரூ.10 கோடி மானநஷ்டஈடு..அறுவை சிகிச்சை நிபுணர் சங்கத்துக்கு ஏஆர் ரஹ்மான் நோட்டீஸ்!
சென்னை: இசை நிகழ்ச்சிக்காக ரூ.29 லட்சம் முன்பணம் பெற்று தராமல் மோசடி செய்ததாக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மீது புகாரளிக்கப்பட்ட நிலையில் 15 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். ரூ.10 கோடி மானநஷ்டஈடு வழங்க வேண்டும் என ஏஆர் ரஹ்மான் சார்பில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திரைப்பட இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான். இவர் கடந்த மாதம் 10ம் தேதி சென்னை ஈசிஆரில் ‛‛மறக்குமா நெஞ்சம்'' என்ற பெயரில் இசைக்கச்சேரி நடத்தினார். இந்த கச்சேரி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது 25 ஆயிரம் பேருக்கு பதில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாகவும், இதனால் இடநெருக்கடி ஏற்பட்ட நிலையில் ஏராளமானவர்கள் டிக்கெட் வாங்கியும் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதனால் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் வாகனம் நெரிசலில் சிக்கியது. மேலும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு தற்போது நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பியவர்களின் டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் ஏஆர் ரஹ்மான் மீது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதாவது, ‛‛கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இதில் ஏஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. முன்பணமாக ரூ. 29.50 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்காததால் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இருப்பினும் முன்பணம் ரூ.29.50 லட்சத்தை திரும்ப கேட்டு கடிதம் அனுப்பியும் அதனை தரவில்லை. அவர்கள் வழங்கிய கசோலை பணமின்றி திரும்பியது. இதனால் ஏஆர் ரஹ்மான் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்று கொடுக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரை ஏஆர் ரஹ்மான் தரப்பு மறுத்தது. இதற்கிடையே அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் ஏஆர் ரஹ்மானுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் தற்போது அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பதில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் ‛‛அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானது. எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துள்ளனர்.
அதோடு கொடுத்ததாக கூறப்படும் பணத்தை நான் பெறவில்லை. 3வது நபரிடம் கொடுத்த பணத்தை கொடுத்ததோடு, எனது பெயரை தேவையின்றி பயன்படுத்தி உள்ளது. இந்த நோட்டீசை 3 நாட்களில் திரும்ப பெற வேண்டும். மேலும் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தியதற்காக 15 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு ரூ.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க வேண்டும். இதை செய்ய தவறினால் சட்டப்படி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும்'' என கூறப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் என்பது ஏஆர் ரஹ்மானின் வழக்கறிஞரான நர்மதா சம்பத் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications