ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இருக்கிறார்? மருத்துவர்களிடம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் (ஏ.ஆர்.ரகுமான்) நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இசைப்புயல் @arrahman அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!

அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! இவ்வாறு பதிவிட்டுள்ளார். அது போல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சார் விரைந்து பூரண நலம் பெற்று இல்லம் திரும்பிட விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவரது உடல்நிலையை மருத்துவர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதுவரை மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து எந்த அறிவிப்புகளும் வரவில்லை. இன்று மாலை ரஹ்மானின் health bulletin வெளியாக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
அவர் பூரண நலம் பெற வேண்டி அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். அண்மையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்திற்கு ரஹ்மான் அமைத்த இசை, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நோன்பு காலம் என்பதால் ரஹ்மான் நோன்பை கடைப்பிடித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. ரஹ்மான் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்பட பல்வேறு இந்திய மொழிகளிலும் உலக அளவிலும் இசையமைத்து வருவதால் ஹைதராபாத், மும்பை, லண்டன் என அவ்வப்போது சென்று வருவார்.

லண்டனில் இருந்து நேற்று இரவுதான் மும்பை வழியாக சென்னை திரும்பினார். இன்று காலை தூங்கி எழுந்த ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சு வலி இருந்தது. இதனால் உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கினார். இப்படியாக தனது பயணத்தை தொடங்கி தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்ட ரஹ்மான், 2008ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காகக ஆஸ்கர் விருதை பெற்றார். மேலும் கோல்டன் குலோப் விருதையும் ரஹ்மான் பெற்றுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications